Wednesday, March 31, 2010

நித்திக்கு பத்து நெத்தியடி யோசனைகள்

ஏகத்திற்கு ஏடாகூடமாக மாட்டிக்கொண்டு தத்து பித்து என்று வாய்க்கு வந்தபடி உளரும் நித்திக்கு பத்து புத்திசாலி யோசனைகளை அள்ளி வீசலாம் என்று "உள் ஆர்.வி.எஸ்" நேற்று இரவிலிருந்தே ஓயாமல் தந்தி அடித்துக்கொண்டிருக்கிறான். வீட்டில் உட்கார்ந்து நெட்டை தட்டலாம் என்றால் நான் பெற்ற செல்வம், முதல் பெண் " சும்மா... ப்ளாக் ப்ளாக்ன்னு.... எதையாவது கிறுக்க வேண்டியது... பேசாம வந்து படு..." என்று விரட்டியடிக்க அந்த மரியாதையோடு நித்திரைக்கு போகாமல், "என்னத்த எழுதி கிழிக்கிறீங்க... நீங்க பேசினாலே யாராலையும் பொறுத்துக்க முடியாது... இப்ப எழுத வேற ஆரம்பிச்சாச்சு... நீங்க எழுதறதை நீங்களே படிச்சானும் பார்க்கிறீங்களா?... அப்படி பண்ணா எழுதமாட்டீங்க... சகிக்கலை..." என்று என் அன்புள்ள மனைவி கிழி கிழி என்று கிழித்தபின் நிலைமையின் தீவிரம் அறிந்து உள்ளே சென்று பொட்டி பாம்பாக படுத்துக்கொண்டேன். இருந்தாலும் நாம் ஒரு "சிந்தானா சிற்பி"யாக இருப்பதால், சிறு மூளை தூக்கத்திலும் வேலை செய்ததாலும் இந்த கீழ் கண்ட யோசனைப் பட்டியலை என் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மிருகம் சொல்லச் சொல்ல முழித்து/விழித்துக்கொண்டு இருக்கும் நான் எழுதுகிறேன்.


அஜால் ஐடியா ஒன்று.
நிறைய நேற்றைய, இன்றைய நடிகைகளுடன் ஒவ்வொரு வீடியோவாக ஏதோ சத்யம் தியேட்டரில் தீபாவளி ரிலீஸ் படம் போல வெளிவருவதால், ஜெயதேவன், சசி போன்ற புகழ்பெற்ற மலையாள பட டைரக்டர்களை அணுகி ஒரு முழு 'நீல' படத்தில்(என்ட சிநேக சாமியார், படத் தலைப்பு காப்புரிமை ஆர்.வி.எஸ்.எம்) நடித்து தன் 'முளு திறமையை' வெளிப்படுத்தி நம்பர் ஒன் 'A' கிளாஸ் நடிகராகி தனக்கென்று ஒரு இடத்தை கலையுலகத்தில் பிடிக்கலாம். ஆஸ்ரமம் நிறைய டப்பு கொட்டிக் கிடப்பதால் அவரே தயாரிப்பாளரும் ஆகிவிடலாம். பக்தகோடிகள் ரசிகர் மன்றங்கள் திறந்து காலுக்கு பாலாபிஷேகம் செய்தது போல கட்அவுட்டுக்கும் செய்யலாம்.

குஜால் ஐடியா இரண்டு.
எம்.ஜி.ஆரின் மாட்டுக்காரவேலன் ஒரு படு பயங்கர ஹிட் படம். நேற்று, இன்று, நாளை என எக்காலத்திலும் எந்த ஊர் திரையரங்கில் திரையிட்டாலும் வெள்ளி விழா காணும் படம். அதுபோல வரலாற்று சரித்திரம் படைத்த படங்களில் வரும் இரட்டையர்களை பார்த்து பழகிய நம் ஜனங்களுக்கு, நாங்கள் இரட்டை பிறவி, நீங்கள் பார்த்த வீடியோவில் என்னைபோலவே இருப்பது என்னுடைய இளைய சகோதரன். ஒரு திருக்கார்த்திகை தீபத்தின் போது தொலைந்துபோனவன் இப்போது என் ஆசிரமத்திற்கு வந்து என் மானத்தை கெடுத்து தொலைத்துவிட்டான் என்று உள்ளம் உருகி எல்லா ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கலாம்.

அஜால் ஐடியா மூன்று.
எல்லோரும் கூடி இருக்கும் ஒரு சத்சங்கத்தில் திடீரென்று கை கால்களை உதறி, பல வினோத சப்தங்களை எழுப்பி அருள் வந்தது போல "நான் பிரம்மச்சாரியா இந்த உலகுக்கு செய்த பொது சேவையை இத்தோட நிறுத்திட்டு, கிரகஸ்தானாகி மனையாளுடன் உபாசிக்க சொல்லுது சாமி இப்ப..." என்று எலெக்ட்ரிக் ஷாக் கண்டது போல ஒரு குதியாட்டம் போட்டு, பக்கத்தில் நிற்கும் அந்த வீடியோவில் ஒத்துழைத்த பாவையை காட்டி "இவங்களையே கட்டிக்க(மனைவியா) உத்தரவு ஆயிருக்கு.." என்று சொல்லி தாலி கட்டிவிட்டால் இந்த பிரச்சினைகளை சுலபமாக சமாளித்துவிடலாம். எங்கள் அந்தரங்க காட்சிகளை காண்பித்த இந்த தொலைக்காட்சி மேல் நான் 'மான' நஷ்ட வழக்கு போடுவேன் என்றும் கூறலாம். இந்த உயர்ந்தரக யோசனையை அளித்தவர் என் அலுவலகத்தில் பணிபுரியும் துணை 'ஜனாதிபதி' அந்தஸ்து உள்ள ஒரு உயரதிகாரி.

குஜால் ஐடியா நான்கு.
ஏற்கனவே வெளிநாடு எங்கும் ஓட்டல் சரவணபவன் போல ஆஸ்ரமக் கிளைகள் திறந்து அமோகமாக வளர்த்து வைத்திருப்பதால், இந்த நாஸ்டி இந்தியாவிலிருந்து வெளியேறி அமேரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் சென்று அந்நாட்டு மக்களுக்கு யோகா, தியானம் போன்ற வாழ்வியல் நுட்பங்களை/சூட்சுமங்களை சொல்லித்தரலாம். இவருக்கு யோகம் இருந்தால் பமீலா ஆண்டர்சன், மடோனா, ஜெனிபர் லோபஸ், அன்ஜெலினா ஜோலி, பாரிஸ் ஹில்டன் போன்றோர் பாத பூஜையும் இன்னபிற குரு சேவைகள் புரிய இவரை சுற்றி வலம் வரலாம். ஆனால் இங்குபோல் அங்கு பக்தைகளுடன் ஒட்டி உறவாடும் நிவாரண (நிர்வாண?) சிகிச்சைகள் வெளியே தெரிந்தால் நிச்சயம் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரம் போட்டு டி.வியில் ப்ளாஷ் காண்பிக்கமாட்டார்கள். நம்மைப்போல அங்கு யாரும் அதிர்ச்சி அடையவும் மாட்டார்கள்.

அஜால் ஐடியா ஐந்து.
விபூதி வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, வாட்ச், செயின் போன்ற பொதுமக்கள் உபயோக பொருட்களை தருவித்தல் இந்தமாதிரியான சில வித்தைகளை கற்றுக்கொள்ள ஒன்றிரெண்டு வருடங்கள் ஆசிரமத்தை ஒரு பொறுப்பான 'ஆ'சாமியிடம் ஒப்படைத்து விடலாம். காலம் எதையும் மறக்கச்செய்யும் ஆகையால், வித்தை கற்று வந்தவுடன் ஒரு புத்தம் புது சந்நியாச வாழ்கையை ஆரம்பிக்கலாம். ருபாய் பத்தாயிரத்திலிருந்து இது போன்ற மாயாஜாலங்கள் கற்றுக்கொடுக்கபடுவதாக போலிச்சாமியார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குஜால் ஐடியா ஆறு.
கூகிள், யாஹூ போன்ற இணைய தேடும் இயந்திரங்களின் தேடுதல் வேட்டையில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து முன்னணியில் உள்ளதால், சாமியார் அவர் பெயரிலேயே ஒரு இணைய அங்காடி (Online Shopping Portal) திறந்து பல லௌகீக சமாச்சாரங்களை விற்க ஆரம்பித்தால் ஓகோவென்று போகும். அப்படியே அவர் அந்த வீடியோவில் விழுங்கும் அந்த மருந்துக்கும் விளம்பரம் கொடுத்தால், தமிழ்நாட்டில் பல லாட்ஜ் வைத்தியர்களின் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்.

அஜால் ஐடியா ஏழு.
சாமியார் பிரசங்கம் செய்வதில் நல்ல கைதேர்ந்த ஆசாமி என்பதால், ஏதாவது ஒரு 'கிளர்ச்சியூட்டும்' மருந்து கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியில் சேரலாம். ஆனால் அந்த கம்பெனியார் இவருக்கு பெண் காரியதரிசி அமர்த்துவதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

குஜால் ஐடியா எட்டு.
ஏற்கனவே திருச்சி சாமியார் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் வருடக்கணக்கில் உள்ளே இருப்பதால், சாமியார்களுக்கு இந்த தேசத்தில் ஒரு பாதுகாப்பு இல்லை எனக் கருத்தில் கொண்டு, சாமியார் நல சம்மேளனம் ஒன்று அமைத்து அதற்க்கு தலைவர் ஆகிவிடலாம். எல்லா போலிச் சாமியார்களையும் அதில் உறுப்பினர்களாக்கி அவர்கள் உரிமைக்காக போராடலாம். ஓமந்தூரார் தோட்டத்தின் முன் உண்ணாவிரதம் இருந்து 'சாமியார்கள் நல வாரியம்' ஒன்று அமைக்க அரசாங்கத்திடம் மனு கொடுக்கலாம்.

அஜால் ஐடியா ஒன்பது.
காசு தான் பெரிய பிரச்சனை என்று இந்த விவகாரத்தின் அடிப்படை கூறுகள் தெரிவிக்கின்றன. வெளியே இருந்தால் போட்டு தள்ளி விடும் அபாயம் உள்ளதால் பேசாமல் மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டால் கொலை செய்யப்படும் ஆபத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளலாம். இரண்டு மூன்று முறை போஜனத்திற்கு வழி உண்டு. மாமியார் வீடு என்பது அந்த வீடியோ பாவையின் அம்மா வீடு அல்ல என்பதை இதை படிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.

குஜால் ஐடியா பத்து.
ஆஸ்ரமம் அமைத்து மிகக் குறைந்த காலத்தில் பணம் பண்ணுவதில் கில்லாடியாக சாமியார் இருப்பதால், 'கொரில்லா போர் முறை' கற்றுக் கொடுக்கும் போர்ப் பயிற்சியாளர் போல ஏதாவது ஒரு மறைவிடத்தில் ஒரு நவீன ஆஸ்ரம தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து தன் போன்ற சக சாமியார்களுக்கு அல்லது ஒரு சாமியாராக முனைபவர்களுக்கு ஒரு தொழில்நுட்ப வாத்தியார் ஆகிவிடலாம். அப்படி இருக்கும் கால கட்டத்திலேயே தன்னை அணுகும் உலக உத்தமர்களுக்கு ஒரு ப்ரீலேன்சர் ( Freelancer=சுதந்திரமாக 'தொழில்' செய்பவர் ) மாதிரி புது ஆஸ்ரமம் அமைக்கும் பணிகளில் வரவு செலவு திட்ட அறிக்கை தயார் செய்து கொடுக்கலாம்.அதற்கான கன்சல்டிங் பீஸ்சை கறாராக கறந்தும் விடலாம்.

மேலும் ரசனைக்கு...........


(மேற்கண்ட வீடியோ இந்த ப்ளாக் ரசிகர்களை குஷிப்படுத்தவே இணைக்கப்பட்டுள்ளது. இதற்கும்  இப்பதிவிற்கும் துளிக்கூட சம்பந்தம் இல்லை என்பதை அனைவரும் அறியவும்.)

இதைக் கண்ணுற்ற என் நண்பர் ஒருவர், எனக்கு சாமியார்கள் தரப்பிலிருந்து அடி நிச்சயம் என்று மகிழ்ச்சியாக கூறினார். அடி வாங்கும் அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என்றுதான் கடைசி வரை புரியவில்லை. பாவம் ஓரிடம் பழி ஓரிடம், இதுதான் உலகம்.

12 comments:

மன்னார்குடி said...

முடியல...

RVS said...

Varugaikku Nandri Mannargudi.

RVSM

Madhavan said...

2nd & 4th Ideas.. really gr8.

RVS said...

மாதவா, நான் கொடுத்த இந்த ஐடியாக்ககளை பார்த்துட்டு என் ஆபீஸ்ல என்னையே ஒரு ஆஸ்ரமம் அமைக்க சொல்றாங்க... ஆந்திரா எப்படி...நீ என்ன சொல்ற.....

R.Gopi said...

//RVS said...
மாதவா, நான் கொடுத்த இந்த ஐடியாக்ககளை பார்த்துட்டு என் ஆபீஸ்ல என்னையே ஒரு ஆஸ்ரமம் அமைக்க சொல்றாங்க... ஆந்திரா எப்படி...நீ என்ன சொல்ற.....//

கரெக்டா தான் சொல்லி இருக்காங்க...

இந்த பதிவை படித்ததும் எனக்கு தோன்றியதை தான் உங்கள் ஆஃபீஸில் சொல்லி இருக்கிறார்கள்..

இப்போ எங்க இருக்கீங்க... ஆஃபீஸா, இல்ல ஏதாவது ஆசிரமம் அமைத்து RVS ஆனந்தாவாக மாறி விட்டீர்களா??

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மாதவா, நான் கொடுத்த இந்த ஐடியாக்ககளை பார்த்துட்டு என் ஆபீஸ்ல என்னையே ஒரு ஆஸ்ரமம் அமைக்க சொல்றாங்க... ஆந்திரா எப்படி...நீ என்ன சொல்ற..//

ஆந்த்ரா பத்தி தெரியாது..... தமிழ்நாட்டுல ஆரம்பிங்க....ஆனா, வீடியோ உரிமை மட்டும் எனக்குத்தான்.

RVS said...

ஆஸ்ரமம் அமைத்தால் நிச்சயம் கோபியானந்தாவிற்கு இடம் இல்லாமலா? உங்க டேட்ஸ் சொன்னா ஆரம்பிச்சிடலாம்...கொஞ்சம் ஏரியாவும் பார்த்து சொல்லுங்க. நன்றி கோபி

வீடியோ உரிமை உங்களுக்கு தான் ஆனா எவ்ளோ 'சி' கொடுப்பீங்க... முதல்ல 'டீல்' அப்பறம் 'ரீல்' ஒ.கே வா பெ.சொ.வி.

ஐடியாவை பாராட்டிய அனைத்து பக்தி உள்ளங்களுக்கும் நன்றி..

Jayadeva said...

குஜால் ஐடியா இரண்டு thaan irukkirathilaye nalla ideavaagath thonrukirathu. ithai Niththi nichchayamaaga muyarchchi seiyyalaam.

சாய் said...

/காலுக்கு பாலாபிஷேகம் செய்தது//

RVS, கால் தானே !!

RVS said...

சாய் சார், சத்தியமா ங்கொப்புரானே கால்தான் ... விவகாரத்துல மாட்டி உட்ருவீங்க போலிருக்கு... ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

சாய் said...

நீங்கள் கம்பெனி Vice President க்கு நாட்டின் "உதவி ஜனாதிபதி" யூஸ் செய்து இருப்பது அருமை. நானும் அதேதான் - I mean VP !! சொல்லிக்க வேண்டியது தான் !!

RVS said...

விவரமான பேர்வழி (VP) ன்னு கூட சொல்லலாம் சாய் சார்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails