Saturday, April 23, 2011

சிலிகான் காதலி - II


ஜீவன் என்கிற நரன் தனது ஜீவனில்லாமல் நொந்து பயோ வேஸ்ட் ஆன படலம் இங்கே.

இனி...
************* இரண்டாவது ஸி.டி *********************

air traffic


....ஜன்னலைத் திறந்தேன். "பீம். பாம். பிப்பீப்பி பாம்" என்று ஏக இரைச்சல் காதை அறுத்தது. வெளியே கழுத்தை நெரிக்கும் டிராஃபிக். என்ன கேட்கிறீர்கள். கீழேவா? இல்லை இல்லை. மேலே அந்தரத்தில் தான். காஸ் பிடித்த வண்டிகள் நடுவானில் கொசுபோல தாறுமாறாக இங்குமங்கும் ஹாரன் ரீங்காரமிட்டு பறக்கின்றன. எவ்வளவு விதத்தில், வகையில். ராஜா கொசு, ராணி கொசு, மத்திம கொசு, நோஞ்சான் கொசு என்று நூற்றியெட்டு வகையறாக்கள். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனுசப் பய மனசு எங்கே மாறுகிறது. பூமியில கட் அடிச்சவன் இப்ப வானத்துல அந்தர்பல்டி அடிக்கறான். தரைவழிப் போக்குவரத்து ரொம்பி வழிந்து ஐம்பது வருடங்கள் ஆகின்றன. எனது அப்பா காரில் எங்களை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு போன அழுக்கு ஃபோட்டோ ஒன்று இன்னமும் என் டெஸ்க்டாப்பில் அலங்காரமாக இருக்கிறது. நிறைய கடைகளின் பலூன் கட்டிய அலங்காரத் தரைத் தளத்தையும், சைக்கிள் என்ற மிதிவண்டி ஒன்றை காலால் மிதித்து உருட்டி பயணித்ததையும், பார்க் போன்ற இடங்களில் சக சிறுவர்களுடன் ஊஞ்சல் கட்டி விளையாடியதும் எனது மெமரியின் அடிவாரத்தில் இன்டெக்ஸ் ஆகி இருந்தது கொஞ்சமாக நகர்ந்து முன்னுக்கு வந்தது.

இந்த இக்கட்டான வேளையில் தேவையில்லாத வீண் சிந்தனை இது. அரசின் பிரஜா விதி 382-ன் படி கொலைகாரனையே தேடி அவன் வீட்டிற்கு கைது செய்ய போலீஸ் வந்தாலும் வீட்டின் உரிமையாளர் கதவை பத்து நிமிடத்திற்குள் திறக்கும் வரை படி தாண்டக் கூடாது. சட்டங்களும் தண்டனைகளும் அதனதன் கடமைகளை செவ்வனே செய்தன. பத்துநிமிட அவகாசத்திற்கு பிறகு ஊர்சாவி உதவியுடன் சுலபமாக கதவைத் திறந்துவிடுவார்கள். ஒரு தட்டை பிளாஸ்டிக் அட்டையில் பொருத்தியிருக்கும் அரசாங்க முத்திரைச் சில்லு ஒன்றை கதவருகில் காண்பித்தால் ஊரில் எல்லாக் கதவும் சல்யூட் அடித்து தானாக திறக்கும். என்னைப் போன்றோரை பிடிக்க வருமுன் மேயரிடம் இருக்கும் மின் பதிவேட்டில் ரிஜிஸ்டர் செய்து எடுத்து வருவார்கள். ஆதிகால தொங்கு பூட்டு போட்டு இழுத்துப் பார்க்கும் கலாசாரமெல்லாம் இப்போது வழக்கத்தில் கிடையாது. திறந்து மூடினால் வழுக்கிக்கொண்டு தோளோடு தோள் சேர்த்து "பச்சக்.." என்று ஒட்டிக் கொள்ளும் கனிந்த காதலி போல கதவு ஒட்டிப் பூட்டிக்கொள்ளும். கா...த..லி... ஹும்...இந்தப் பாழும் நினைவை கொளுத்தவேண்டும்.

இப்போது ஜன்னலின் விளிம்பில் நிறுத்தி வைத்திருந்த என்னுடைய அந்த லோ காஸ்ட் புஷ்பக விமானத்தை எடுத்தேன். ஒரு ஆள் குத்த வச்சு உட்காரலாம். ஸ்டீரிங், பிரேக், அப், டவுன், ஆக்சிலேட்டர். அந்த வண்டியின் இந்த ஐம்புலனும் வேலை செய்யும். அவ்வளவுதான். மணிக்கு இருநூறு கி.மீ தான் செல்லும் இந்த சப்பை வண்டி. அடுத்த ஜன்னல் வீட்டுக்காரன் ஐநூறில் பொண்டாட்டியுடன் சொகுசாகப் பறக்கிறான். கீழே இருக்கும் வயசாளி காவல் ரோபோ என்னைப் பார்த்தது இக்கணத்தில் நான் செத்தேன்.

பக்கத்துக் கோபுர கட்டிட எழுபத்தி இரண்டாம் மாடி
"ஹேய்! ஜீவன் ஹொவ் ஆர் யு? பார்த்து ரொம்ப நாளாச்சு.." என்று கங்காரு போல தலையை நீட்டி நலம் விசாரித்தது.

"யா! நா நல்லா இருக்கேன். நீங்க?" என்று  பழங்காலத்தில் இருந்து செத்த வீட்டில் பார்த்தால் கூட நாம் சொல்லும் அதே செத்த பதிலை உதிர்த்தேன்.

"என்ன இந்த டயத்ல... டூட்டிக்கு கிளம்பிட்டியா?" குஷி மூடில் சிரித்துக்கொண்டே கேட்டது.

"இல்ல. சும்மாதான்... காய்கறி தொழிற்சாலை நடத்தும் கண்காட்சி வரை போய்வரலாம்ன்னு..." என்று நான் முடிக்கக் கூட இல்லை.. உடனே...

"ஓ! குட். குட். நேத்திக்கு நான் போயிருந்தேன். ஒருத்தன் பச்சைப் பாம்பு மாதிரியே என்னளவுக்கு நீளமாய்ப் புடலங்காய் தயார் பண்ணி காண்பிச்சான்! வாங்கிட்டு வந்து சைனீஸ் ஃபுட் போல நறுக்கி சமைச்சு சாப்பிட்டேன். டேஸ்ட்டா இருந்தது. நல்லவேளை காய் உள்ளயிருந்து ரத்தம் வரலை. ஹி..ஹி.." என்று நேரங்காலம் தெரியாமல் பிளேடு போட்டது சனியன்.

"அப்டியா.. சரி நானும் அங்கதான் பார்க்கப் போறேன்.."

"வரும்போது எனக்கு ரெண்டு முள்ளுத்தோல் இல்லாத மொழுக் பலாப்பழம் வாங்கிகிட்டு வரியா? பாலாச்சுளை சாப்பிடனும் போல இருக்கு. ப்ளீஸ்" கெஞ்சியது அந்த நோஞ்சான் பக்கத்து பில்டிங் 72-வது மாடி.

"வாங்கிட்டு வரேன்.. நா இப்ப கிளம்பறேன்"

"காசு வாங்கிக்காம போறியே!" விண்ணதிர கூப்பாடு போட்டது.

நாக்கை அறுக்க. 120 வயசில் இந்தக் கிழத்துக்கு அப்படி என்ன தீனி வேண்டிக் கிடக்கு. இது வாய்க்கு ஒரு பூட்டு போடணும்.

"என் அக்கவுன்ட்டுக்கு மணி ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க.." காற்றில் என் குரல் கரைய புகையாய்ப் பறந்தேன்.

"நம்பர்?" என்று மறு ஓலமிட்டது.

"567-123-0808" என்று அது கேட்ட என் வங்கிக் கணக்கு எண்ணை அதற்கு மெசேஜ் செய்தேன்.


அந்த மெசேஜ் செய்யும் போது நான் கா.கண்காட்சியில் இறங்கியிருந்தேன். எனது வண்டியில் லோடாகி மிச்சம் இருந்த ஃப்ரீ எக்ஸிட் டோகேன் வயசாளி ரோபோவை என் பக்கம் திரும்ப விடாமல் கவனித்துக் கொண்டது.

ஆகாயத்திலிருந்து கீழே கலர்க்கலர் குடைகளாய் கண்காட்சி தெரிந்தது. கீழிருந்து விண்ணை நோக்கி ஐநூறு அடி உயரத்திற்கு இரும்புப் படிக் கட்டியிருந்தார்கள். ஆதியந்தம் காண முடியாத ஒரு ரோலர் கோஸ்டர் போல அது வானத்தை குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது. எல்லாம் ராட்சத இரும்பு படிகள். வண்டியை அந்தரத்தில் அந்தப் படியோடு இணைந்த ஷார்ட் ஷட்டில் பார்க்கிங்கில் அணைத்து நிறுத்திவிட்டு  ஒவ்வொரு படியாக குதித்து குதித்து அவசரமாக கீழே இறங்கினேன். முதலில் காவலர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும்.

இந்நேரம் ஊர்சாவியில் என்னுடைய அகத்தை கஷ்டப்படாமல் "கிளுக்" என்று நறுவிசாக திறந்திருப்பார்கள். ஒவ்வொரு அறையாக ஜல்லடை போட்டு என்னுடைய ஆவணங்களை தேடுவார்கள். என்னுடைய பூர்வீகம் என்ன? என்ன தொழில் செய்கிறேன்? எனக்கு அரசு அளித்த மானியங்கள் என்ன? யார் யாருக்கு என்னென்ன கடன் வைத்திருக்கிறேன்? கடைசியாக யாரிடம் அலைபேசியில் சுடசுடக் கடலைப் போட்டேன்? நேற்றுவரை எந்தெந்த இடத்தில் பொழுதைக் கழித்தேன்? என்று ஒன்றுவிடாமல் அரை மணியில் சப்ஜாடாக அரித்து எடுத்துவிடுவார்கள். தேடட்டும். "ஸ்.. ப்பா" துடிதுடித்து கையை உதறினேன். புல்டோசர் போல எதிரே வந்தவன் நங்கென்று என் தோளில் இடித்தான். எதிர்சாரியில் செல்லும் புடவை கட்டிய பொம்பளை ரோபோவைப் பார்த்து லிட்டர் லிட்டராய் ஜொள்ளி என் மேல் விழுந்துவிட்டான். படு பாவி!

ரோபோவுக்கும் பெண்ணுக்கும் வித்யாசம் தெரியாத கபோதி. கை பயங்கரமாக வலித்தது. அழுந்த துடைத்து விட்டுக் கொண்டேன். ஆஹா! மறந்தே விட்டேன். ச்சே! இதை எப்படி மறந்து தொலைத்தேன். பிறந்தவுடன் என்னுடைய புஜத்தில் கவசகுண்டலமாக குத்தியிருக்கும் RFIDயை முதலில் செயலிழக்க செய்யவேண்டும். போலீஸ் கையில் இருக்கும் ரீடரில் என்னுடைய நடமாட்டங்கள் ஒவ்வொன்றையும் படம் பிடித்து ஷோ காண்பித்துக் கொண்டிருக்கும். அவர்கள் கையில் இருக்கும் எலக்டிரானிக் ஊர் வரைபடத்தில் எறும்பு ஊறுவது போல நான் சிகப்பு புள்ளியாக அங்குலம் அங்குலமாக தெருக்களில் ஊர்ந்து கொண்டிருப்பேன். அந்தக் காலத்தில் அம்மைக்கு தடுப்பூசி போடுவது போல இப்போதெல்லாம் புஜத்தில் RFID Tag ஒன்றை குத்தித் தைத்து விடுகிறார்கள். டி.வியில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்களுடைய பிரஜா எண்ணை தட்டினால் நீங்கள் எந்த டாய்லெட்டில் ஒளிந்து கொண்டு ஒன்றுக்கு போகிறீர்கள் என்று கூட கண்டுபிடித்துவிடுவார்கள். எமகாதகர்கள்!

ராட்சத படிக்கட்டு இறங்கியதும் பெரிய நீர்த்தொட்டி போன்ற வாயகன்ற வாணாய் ஒன்றை அடுப்பில் ஏற்றி ஆயிரம் பேருக்கு ஏககாலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு மூலிகை டீ தயாரிப்பதற்கு ஒரு பிரம்மாண்டமான கலர்க் கொட்டகைக் கடை ஒன்றை விரித்திருந்தார்கள். அருகில் எல்லா விரலையும் மடித்து நடுவிரலை ஆகாசத்தை காட்டி உயர்த்தி படம் போட்டு ஏதோ அசிங்க வாசக அரைக்கை வெள்ளை பனியனும் தொடையளவு ஜிலுஜிலு கருப்பு ஸ்கர்ட்டும் போட்ட ஒரு சீனாக்காரி தன் சப்பை மூக்கை நீவி விட்டு அதை பெரிதாக்கிக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் இருந்த குள்ள சீனக்காரன் வேறு யாரையோ வெறிக்க வெறிக்க 'A' படம் போல பார்த்துக் கொண்டிருந்தான். நாலைந்து ரோபோ அடிமைகள் வருவோர் போவோருக்கு டீ பிஸ்கட் கொடுத்து சேவகம் செய்து கொண்டிருந்தன. கடையோரத்தில் ரிப்பேர் ஆன ஒரு ரோபோவிலிருந்து புகை வர ஓரத்தில் ஒரு நாற்காலியில் சாய்த்து வைத்திருந்தார்கள். "கிர்..கிர்..கிர்க்.." என்று சத்தம் வர அழுதுகொண்டிருந்தது.

"Excuse me" என்று ஆங்கிலத்தில் நான் புலவன் ஷேக்ஸ்பியர் போல செப்பியதர்க்கு
"Yesh..."
எஷ் என்று இங்கிலீஷை தன் உதட்டால் ஈஷிய சீன தேச சிங்காரியை சிரித்து சமாளித்து அருகில் சென்றேன். சடாரென கால் தடுக்கி கீழே சரிவது போல அடுப்பில் வெந்துகொண்டிருந்த வாணாயின் அடிபாகத்தில் என்னுடைய வலது தோள்பட்டை படுவது போல இயல்பாக விழுந்தேன். அங்கு தான் RFID பொருத்தியிருக்கிறார்கள்.

"ஆ..ஆ..." என்று நான் கத்தியதில் அந்தக் கடையே மொத்தமாக திரும்பிப் பார்த்தது. மிரண்டு போய் வாய்க்குள் டீ ஊத்துவதற்கு பதிலாக சட்டைமேல் ஊற்றிக்கொண்டான் ஒரு பரட்டைத் தலை ப்ரஹஸ்பதி. எரியும் அடுப்பிற்குள் விழாதது என் ஆத்தாவுக்கு ஆத்தாவுக்கு ஆத்தாவுக்கு ஆத்தா செய்த புண்ணியமே. நினைத்தது போல வானாயின் அடிபாகத்தில் தோள்பட்டை சமீபம் தேய்த்து மிகச் சரியாக RFID ஃபிக்ஸ் செய்திருந்த இடம் பொத்துப் போய்விட்டது. தீப்புண்ணிலும் ஒரு திருப்தி. சுட்ட வலியிலும் ஒரு சுகம். நிச்சயம் இன்னும் 48 மணி நேரத்திற்கு அவர்களுக்கு என்னைப் பற்றிய அப்டேட் போகாது. கடைசியாக இந்தக் கண்காட்சியில் இருந்ததாக தகவல் போயிருக்கும். இந்தப் புண்ணிய பூமியில் எப்போதோ திருவிழாவில் காணாமல் போவார்களாம். அதுபோல நான் கண்காட்சியில் தொலைந்து போய்விட்டதாக நினைத்துக் கொள்ளட்டும்.

சீனாக்காரிக்கு ஒரு பலமான "ஸாரி!" சொல்லிவிட்டு ஜனசமுத்திரத்திற்குள் சங்கமம் ஆனேன். வாய்க்கு வஞ்சனை இல்லாமல் தின்று கொண்டிருந்தார்கள். இடது பக்கம் பார்த்துவிட்டு எதேச்சையாய் திரும்பிய எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! காடாய் விரித்த கருங்கூந்தலில் முன்னால் போகும் அவள்! துள்ளல் நடையைப் பார்த்தால் அசப்பில் ஜீவிதா போலவே இருக்கிறது! வளைந்த தோளிலிருந்து கழுத்தைத் தடவி நழுவி வழியும் மஃப்ளர். முக்கால் பேன்ட் அணிந்திருந்ததில் கணுக்கால் ரசம் பூசாத கண்ணாடியாக பக்கத்து கடை விளக்கை பளிச்சென்று பிரதிபலித்தது. பேன்ட்டிற்கும் மேலே இருந்த சட்டைக்கும் 'இடை'ப்பட்ட இடம் வெண்ணை தடவியது போல வழவழ பளிங்காக சிறுத்து டாலடித்துக் கொண்டிருந்தது. ஐந்தடி ஆறங்குல வாசனை மலர்க்கொத்து கால் முளைத்து நடப்பது போல போய்க் கொண்டிருக்கிறாள். விடாதே! அவளேதான். பிடி! துரத்து என்று கட்டளையிட்டது மூளையின் ஒரு ஓர முடிச்சில் இருந்த ஒரு அடங்காப்பிடாரி ந்யூரான். தோளில் அடிபட்டது விண் விண்ணென்று தெறிக்க துரத்தினேன்.

இன்னும் இரண்டடியில் பிடிக்கலாம் என்று நினைத்த போது ஒரு தடியன் குறுக்கே வந்தான். அந்த மாமிச மலையை தாண்டி தலை தெறிக்க ஓடினேன். இதோ தோளைத்தொடும் தூரத்திற்கு வந்து விட்டேன். மனசு கிடந்து அடித்துக்கொண்டது. நான் கூப்பிட்டு திரும்பியதும் அவள் கட்டிப் பிடிக்கப்போகும் இன்பத் தருணங்களை மூளை இப்போதே ஒரு முறை ரிகர்சல் பார்த்தது. சுற்றிலும் ஆயிரம் ரோபோக்கள் "தந்தன தந்தன" பாடினார்கள்.

"ஜீவிதா!" என்று ஆசையுடன் காதல் மொழி பேசி தோளைத் தொட்டு என் பக்கம் திருப்பினேன்....
"ஆ".....

விஞ்ஞானம் வளரும்...
 பின் குறிப்பு:
முதன் முறையாக ஒரு முழு நீள அறிவியல் புனைவு போல ஒரு கதை எழுதுகிறேன். குறைகளை இந்தச் சமூகம் மன்னிக்கட்டும். நிறைகளை வாழ்த்தட்டும்.

பட உதவி: wisb.blogspot.com

-

30 comments:

இராஜராஜேஸ்வரி said...

புண்ணிலும் ஒரு திருப்தி. சுட்ட வலியிலும் ஒரு சுகம். நிச்சயம் இன்னும் 48 மணி நேரத்திற்கு அவர்களுக்கு என்னைப் பற்றிய அப்டேட் போகாது. கடைசியாக இந்தக் கண்காட்சியில் இருந்ததாக தகவல் போயிருக்கும். இந்தப் புண்ணிய பூமியில் எப்போதோ திருவிழாவில் காணாமல் போவார்களாம். அதுபோல நான் கண்காட்சியில் தொலைந்து போய்விட்டதாக நினைத்துக் கொள்ளட்டும். //
very Interesting lines.

பத்மநாபன் said...

பிரித்தது படிக்க இதமாக இருக்கிறது ...படித்துவிட்டு வருகிறேன் ....

பத்மநாபன் said...

///மனுசப் பய மனசு/// ///கனிந்த காதலி// இப்படி வார்த்தை பிரயோகங்களும் உவமைகளும் தெறிக்க சிலிக்கன் எக்ஸ்பிரஸ் நல்ல வேகம் எடுத்துவிட்டது ... தள்ளி வரும் காலத்தில் , வண்டியின் வேகம் , ரோபோக்களின் செயல்பாடுகள் .. கற்பனை என்பதை விட மனநீட்சி சுருதி சுத்தமாக இருக்கிறது ....
கடைசி ஆ சஸ்பென்ஸ் மேல் ஆர்வம் வந்து விட்டது ..

ஸ்ரீராம். said...

கற்பனைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. தொடருங்கள்.

ஸ்ரீராம். said...

அவளவு முன்னேறிய காலத்தில் ஜீவன் ஜீவிதா என்ற பெயர்கள்? நல்ல வேளை யஞராமகணபதி சுப்பிரமணியம் என்று இல்லை என்கிறீர்களோ?

ஸ்ரீராம். said...

RFID Tag இரண்டு மணி நேரம்தான் செயலிழக்குமா?

RVS said...

@இராஜராஜேஸ்வரி

Thank you Madam! ;-))

RVS said...

@பத்மநாபன்
தங்களின் மனம் திறந்த பாராட்டு என்னை உத்வேகம் கொள்ளச் செய்கிறது பத்துஜி! நன்றி. ;-))

! சிவகுமார் ! said...

// குடும்பத்தோடு போன அழுக்கு ஃபோட்டோ ஒன்று இன்னமும் என் டெஸ்க்டாப்பில்//

அழகிய கற்பனை.

RVS said...

@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம்.
ஜீவன் - என்பது, உலோக உலகத்தில் இன்னமும் இவனைப் போல ரத்தமும் சதையுமாக இருப்பவர்கள் வைத்துக்கொள்ளும் ஒரு உன்னத பெயர். இப்போது நம்முடைய காலத்தில் அபிதகுஜாம்பாள் என்று பெயர் வைத்துக்கொண்டிருப்பவர்கள் இல்லையா? ஜீவனுடைய காதலி ஜீவிதா.

48 மணிநேரத்திற்கு பிறகு வேறு விதமாக தேட ஆரம்பிப்பார்கள். அதுவரை தேட ஆரம்பிக்க மாட்டார்கள். அப்புறம் வலிவீசி தேடுவார்கள். அடுத்த பார்ட்டில் இன்னும் கொஞ்சம் விளங்கும். இப்போதுதானே இதுபோல எழுத ஆரம்பித்திருக்கிறேன். கொஞ்சம் பொறுத்துகொள்ளுங்கள். ;-))

RVS said...

@! சிவகுமார் !
பாராட்டுக்கு மிக்க நன்றி சிவக்குமார்! ;-))

சுந்தர்ஜி said...

விட்டதைப் பிடித்துவிட்டீர்கள் ஆர்விஎஸ்.

நிறையக் கற்பனைகளின் கடாயில் வறுத்த தருணங்கள். உங்களின் திகட்டாத வர்ணனை.

போன பதிவில் கிட்டாதனவெல்லாம் இப்பதிவில் தொட்டேன்.

தொடருங்கள் இதே போல்.சபாஷ்.

ஸ்ரீராம். said...
This comment has been removed by the author.
கக்கு - மாணிக்கம் said...

இரவில் தூங்குவது உண்டா மைனரே?! இவைகளை யோசித்து யோசித்து ...............இந்த சிலிகான் சிட்டி சற்று பயங்கரமாகவே உள்ளது.

R.Gopi said...

ஆஹா...

என்னே சுவாரஸ்யம்...

பூலோகத்தில் அதகளம் செய்த நீங்கள், இப்போது ஆகாயத்தில் அதகளமா?

நடத்துங்கள் தலைவரே...

சிலிக்கான் சிட்டி கலங்கடிக்கிறதே...

//"567-123-0808" என்று அது கேட்ட என் வங்கிக் கணக்கு எண்ணை அதற்கு மெசேஜ் செய்தேன்.//

1.78 லட்சம் கோடிகளில் இருந்து, ஏதாவது ஒரு பங்கு வந்ததா?

வெங்கட் நாகராஜ் said...

அதுதானே எல்லாருக்கும் வேண்டியது மைனரே. மனதுக்குள் இத்தனையும் ஓட்டிக்கொண்டே இருப்பீர்களோ….

A.R.RAJAGOPALAN said...

கட்டுக்கடங்கா கற்பனையில் கடைந்தெடுத்த அமிர்தம் போல் அளவில்லா ஆச்சர்யங்களுடன் அட்டகாச வரிகள் , அதுவும் அந்த பார்கிங் விவரிப்பு .......... பிரமிப்பு .............

கோவை2தில்லி said...

கற்பனை அபாரம். அறிவியல் கதை பிரமாதமாய் போய்க் கொண்டிருக்கிறது.

அறிவன்#11802717200764379909 said...

மிகுந்த வேகத்தில் செல்லும் கதை...

கதை படிக்கும் ஒட்டத்தை இன்னும் அதிகப் படுத்தும் உத்தி ஒன்று இருக்கிறது..

இப்போது எழுதி இருக்கும் சுமார 13 வரிக்கு மேல் இருக்கும் பத்திகளை இரண்டிரண்டாகப் பிரித்து விடுங்கள்..

படிப்பவரின் அனுபவத்தில் இன்னும் கதையின் வேகம் அதிகப்படும்.

சிலசமயம் கோனார் நோட்ஸின் பொழிப்புரை போல(அளவில்) பெரிய பத்தியாகத் தோன்றுகிறது.

பட்,கதை சரியான திசையில் வேகத்தில் செல்கிறது.

தொடருங்கள்.

வாணாய் என்றால் வாணலியா?

RVS said...

@சுந்தர்ஜி
ஊக்கத்திற்கு நன்றி ஜி! சுவாரஸ்யமாக கொண்டு போக முயற்சிக்கிறேன். ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
ஹா.ஹா.. ஏதோ எனக்கு தெரிந்த சில சயின்ஸ் விஷங்களை வைத்து கிறுக்குகிறேன் மாணிக்கம். பாராட்டுக்கு நன்றி. ;-))

RVS said...

@R.Gopi
பாராட்டுக்கு நன்றி கோபி.
பங்கு கிடைத்திருந்தால் உள்ளே கம்பி எண்ணிக்கொண்டிருப்பேன்! ;-))))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஏதோ வருகிறது.. பாராட்டுக்கு நன்றி தலைநகரமே! ;-))

RVS said...

@A.R.RAJAGOPALAN
கோப்லி... உன்னுடைய தொடர் உற்சாக பாராட்டுகளுக்கு நன்றி நண்பா! ;-))

RVS said...

@கோவை2தில்லி
நன்றிங்க சகோ! தொடர்ந்து படியுங்கள்... ;-))

RVS said...

@அறிவன்#11802717200764379909
நன்றி சார்!
உங்களுடைய டிப்ஸ்களுக்கு நன்றி. பத்துஜி சித்ரா போன்றோர் கூட பத்தி பத்தி பிரி என்று தலையால் அடித்துக் கொள்கிறார்கள்! எண்ண ஓட்டத்தை எழுதும் போது விட்டுவிடுகிறேன்.
ஆமாம் வாணலி தான். ;-))

தக்குடு said...

ம்ம்ம், சுவாரசியமா தான் இருக்கு, படிச்சுண்டு இருக்கேன்..:)

சிவகுமாரன் said...

பிரமிப்பாக இருக்கிறது RVS , அறிவியலில் கற்பனை புகுத்துவது சாதாரண வேலை இல்லை. காய்கறி தொழிற்சாலை -- நல்ல கற்பனை. பின்னாடி பாருங்க உங்க பிளைட்டுல தொங்கிகிட்டு வந்துக்கிட்டு இருக்கேன்.

அப்பாதுரை said...

எனக்கும் வாணாய் பற்றிச் சந்தேகம் வந்தது - தீர்த்து வைத்த அறிவனுக்கும் உங்களுக்கும் ந.

படங்கள் எங்கே பிடித்தீர்கள்? கொஞ்சம் நினைவுகளைக் கிளறி விட்டது. ஒரு கதைக்காகப் படங்களைத் தேடிக் கொண்டிருந்தேன்.. ஆச்சு, ரெண்டு வருசம்.

ஸ்ரீராம் சொன்ன யஞ்ய பேரை வச்சு ஒண்ணு எழுதிடுங்க.

RFID? இருநூறு வருடம் கழித்து?

அப்பாதுரை said...

பட உதவி link பார்த்தேன்; நன்றி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails