Monday, April 25, 2011

சிலிகான் காதலி - III

முன்னாலே...முன்னாலே...
இன்னும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்காலத்தில் இயந்திரமயமாகிப் போன ஒரு உலோக உலகில் ஆசாபாச உணர்வுகளோடு தவித்த ஜீவன் என்ற மானிடன் தனது காதலியைக் காணாமல் தவித்தான். அவன் செய்த ஒரு குற்றத்திற்காக போலீசார் வேறு அவனைத் துரத்துகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவன் தப்பித்து ஓடி ஒரு காய்கறி கண்காட்சியில் ஒளிகிறான். அங்கு அவனது காதலி போலவே ஒருத்தியைப் பார்த்து பின்னால் சென்று துரத்தித் தோளைத் தொட்டு திருப்புகையில்.....

இனி....
********************** மூன்றாவது ஸி. டி **************************

city

ஆ.. அவளேதான்... இன்பத்தில் பலமுறை நடனம் ஆடியது எனது காதல் வசப்பட்ட இதயம். மூச்சடைக்கும் விதமாக மேலாடை உடுத்திருந்தவளை பார்த்து தித்தித்த என் மனசு உச்சுக் கொட்டியது.  என்னைச் சுற்றிலும் கூட்டமாக இருந்த நிற்பது, நடப்பது, பறப்பது எல்லாம் மாயமாய் மறைந்து காற்றில் கரைந்து போனது. இந்த ஷணத்தில் என் மனதில் போலீஸ் பயம் விலகி மாவீரனாய் விஸ்வரூபம் எடுத்து நின்றேன்.

"மண்ணில் மாந்தர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" எப்போதோ எங்கேயோ தட்டுக்கெட்டு நெட்டில் பார்த்த வாசகங்கள் இப்போது எட்டிப் பார்த்தன. அவள் முன்னே நான் தனியாளாய் எங்கள் இருவருக்குமான அந்தரங்க லோகத்தில் ஆனந்தமாக சஞ்சரித்தேன். இந்தப் புற உலகத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எலக்ட்ரானிக் கருவிகளின் முடிவில்லா "பீக்.பீக்.பீக்."குகள் எனது செவியில் இப்போது ஏறவில்லை. அவளின் கருநீலக் கண்ணோடு என் செவ்வரி ஓடிய கண் சேர்த்துப் பார்த்தேன். அவளின் மிருதுவான பட்டுக் கையோடு என் முரட்டுக் கையை கோர்க்கப் போனேன். அருகில் நெருங்கி அவள் தடவியிருந்த கொலோன் வாசனையை மூக்கில் பிடித்து 

"ஜீவிதா!" என்று கண்கள் சொருகி அடிக்குரலில் ரொமாண்டிக்காக கூப்பிட்டேன். கடைசி 'தா' அவள் காதுகளை அடையும் முன் நிச்சயம் அவள் காலடியில் சரணாகதி அடைந்திருக்கும். என்னைப் போல.

"யார் நீ?" என்று காட்டுக் கத்தலாக கத்தி சட்டென்று தோளை உதறி விடுவித்துக் கொண்டு என் மீது எரிந்து விழுந்தாள்.

கோபாக்கினியில் அவள் முகம் சிவந்தது. அவளது சிவந்த முகம் கண்டு என் மனசு குபீர் என்று நெருப்புப்பொறி கண்ட எரிவாயு போல பற்றிக்கொண்டது. பக்கத்தில் நடந்து சென்ற ஒரு ஜோடி இளக்காரமாய் திரும்பிப் பார்த்தது. அரை நொடியில் பளிச் என்று ஒரு மின்னல் என் பின்புறம் வெட்டியது. நிதானத்திற்கு வந்து திரும்பிப் பார்த்தேன். ஏதோ ஒரு மீசை வைத்த டிராயர்-சட்டை தலைக்கு கிளிப் குத்திக்கொண்டு மேடிட்ட சட்டை உடுத்தியிருந்த மீசையில்லாத டிராயர்யை ஃபோட்டோ எடுத்திருந்தது. ச்சே. யாரும் டிஜி ஸ்கேன் செய்துவிட்டார்களோ என்று பதறிவிட்டேன்.

"ஜீவிதா, நான் ஜீவன். உன்னுடைய காதலன். உன்னுடைய இதயத்திற்கு சொந்தக்காரன். இவ்வையகத்தில் இப்போது அருகிவிட்ட ஆண்-பெண் திருமணத்தை தட்டி நிமிர்த்தப் போகிற நிஜமான உயிருள்ள லவ்வர்ஸ் நாம்."

"யாருடைய ஜீவன்? எந்த ஜீவன்?" என்று அடுக்கு மொழிகளில் அதிகார தோரணையில் காதைப் பொத்திக்கொண்டு கண் மூடி சுடு கேள்விகள் கேட்டாள்.

"நீயும் நானும் உன் கல்லூரி கம்ப்யூட்டர் லைப்ரரியில் பார்த்துக்கொண்டோம். கான்டீனில் பழகினோம். ஓடும் பஸ்ஸில் காதலித்தோம். ஒருநாள் உன் கை பட்ட ஸ்பரிசத்தில் என்னுள் மின்சாரம் பாய்ந்து அந்த கணத்தில் இருந்து உன்னுள் குடி வந்துவிட்டேன். ஞாபகம் இல்லையா?" கெஞ்சினேன். என் நாக்கு வறண்டது. தொண்டை கமறியது.

என்னையே சிறிது நேரம் வெறித்து பார்த்தாள்.
வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர் போல தடுமாறியது எனது உள்ளம். மூளைக்குள் யாரோ "டர்.....ர்ர்ர்ர்ர்ர்ர்"ரென்று சுழன்று இங்குமங்கும் மோட்டார் போட் விட்டார்கள். உணர்வுகள் செத்துவிட்ட இந்த ரோபோக்களின் ராஜ்ஜியத்தில் இவளிடத்தில் இதை எதிர்பார்க்கக் கூடாதோ? சந்தேகத்தில் கண்களை கசக்கி விட்டு மீண்டும் ஒரு முறை அவளை உற்றுப் பார்த்தேன். கட்டுப்பாட்டில் இல்லாத என்  பார்வைகள் அவளைத் தகாத இடங்களில் துளைத்ததும் என்னைப் பார்த்து முறைத்தாள்.

"ஏய்... யார் நீ? ஏன் என் பின்னால் சுற்றுகிறாய்? எங்கெங்கோ பார்க்கிறாய்? சித்த ஸ்வாதீனம் இல்லாதவனா? அல்லது அரசாங்கத்தால் மூளை உருவப்பட்டவனா?" என்று சரமாரியாகக் கேள்வி புல்லட்டுகளால் என்னைச் சுட்டுச் சல்லடையாகத் துளைத்தாள். என் மார்பு பிரதேசத்தை ஊடுருவி ஒளி சிறு சிறு புள்ளிகளாக எனக்கு பின்னால் தரையில் டிஸ்கோ ஒளி வட்டமாக இரைந்தது கிடப்பது போன்ற ஓர் உணர்வு.

"ஜீவிதா! நான் உன் காதலன். உன்னுடைய ஒவ்வொரு அங்கத்திற்கும் ராப்பகலாக இன்டர்நெட்டில் இடுப்பொடிய உட்கார்ந்து மாடல் தயாரித்து கொடுத்தவனே நான் தானே! பக்கத்தில் உட்கார்ந்து டீ போட்டுக் கொடுத்தாயேடி. உன்னை ஒரு ஹவர் கிளாஸ் போல வடிவமைக்கப் படாத பாடுபட்டவன். என்னால் தானே நீ இந்த அழகு பெற்றாய். என்னைத் தெரியாது என்று மட்டும் சொல்லிவிடாதே" என்று அவளுக்கு நான் எழுதிய சாஃப்ட்வேர் பற்றியும் என் பாண்டித்யத்தை பற்றியும் சொல்லி மன்றாடினேன்.  ம்ஹும் அவள் மசியவில்லை.

உச்சி வெய்யில் ஏறி மண்டையைப் பிளக்க ஆரம்பித்தது. இவள் வேறு ஏற்கனவே என் நெஞ்சத்தை பிளந்துவிட்டாள். "சொய்ங்...சொய்ங்..சொய்ங்.." என்ற சைரன் ஒலி என் காதைப் பிளந்தது. ஆகாயமார்க்கமாக அவர்களும் வந்து என்னுடைய தடம் தெரிந்த கடைசி இடமாகிய இந்த கண்காட்சியில் வந்து இறங்கி விட்டார்கள். கடமையும் பொறுப்பும் நிறைந்த உத்தமர்கள். இந்த மாதத்தில் எவ்ளோ திருடர்கள் பிடித்தார்கள், எவ்ளோ ரோபோ கடத்தல்காரர்களை கவர்ந்தார்கள், எவ்ளோ திருட்டு க்ளோனிங் டாக்டர்களை இழுத்து வந்தார்கள் என்று அவர்களுக்கும் டார்கெட் இருக்கிறது. எல்லாவற்றிலும் கணக்கு பார்க்கிறார்கள்.

கடகடவென்று என் சட்டைப் பையை தடவிப் பார்த்தேன். லோக்கல் கள்ள மார்க்கெட்டில் தயாரான பிரஜா எண் காட்டும் கருவி. அரசாங்கம் வைத்திருக்கும் அதே வேலைகளை இதுவும் செய்யும். முன்னால் ஒட்டியிருக்கும் ஹோலோக்ராம் மட்டும் வேறே! இடதுக் கை பெருவிரலை அதன் மேல் வைத்து அழுத்தினால் டிஸ்ப்ளேயில் அவர்களது எண் தெரியும். அவள் கையை இழுத்து விரலை வைத்துப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். என் மீதிருக்கும் பயத்தில் அவள் ZZZ என்று அலைபேசியில் தட்டினால் ஐந்து நிமிடத்திற்குள் அவள் இருக்கும் இடத்திற்கு ஒரு சேனையாக கிளம்பி வந்துவிடுவார்கள் காவலோத்தமர்கள். அந்தக் காலத்தில் நூறோ, இருநூறோ கொடுத்து 'கவனித்தால்' கண்டுக்காமல் சென்று விடுவார்களாம். ஹும்.. அது அந்தக் காலம். இனி தாமதித்து பிரயோஜனம் இல்லை. சீக்கிரம் வேலையை முடி என்ற கட்டளை எழுந்தது.

"ஸாரி மேடம்!" என்று சம்பிரதாயமாக சொல்லிவிட்டு கையை இழுத்து விரலை என் கருவியில் வைத்தேன். அது நீலக் கலரில்

3ffe:1900:4545:3:200:f8ff:fe21:67cf 

என்று கண்ணடித்து காண்பித்தது. 'ஓ' வென்று வாயெடுத்து அலறிவிட்டேன். இது அவள் இல்லை.  கையை இழுக்கும் முன் போட்ட அந்த ஸாரியை இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாக ரிப்பீட்டினேன்.  விடு ஜூட்! எடுத்தேன் ஓட்டம். என் மூளை குழம்பியது. எங்கோ தவறு நடந்திருக்கிறது.

ஒவ்வோர் பிரஜைக்கும் ஒரு Hexadecimal IPயை பிரஜா எண்ணாக வைத்திருந்தார்கள். இது எங்கள் நாட்டிற்கு மட்டும் இருக்கும் எண் அல்ல. இந்த அண்டசராசரத்தின் ஒவ்வோர் மூலையில் இருக்கும் மக்களுக்கும் இது போல ஒரு எண் பொருந்தும். பாக் ஜலசந்தியில் கப்பலில் பயணிக்கும் தின்னவேலி பக்கத்து கல்லிடை கிராம சிறுவனுக்கு கூட ஒரு நம்பர் உண்டு. பிறந்தவுடன் மருத்துவமனைகளில் புகுந்து கைகால் ரேகைகளையும் கண்களின் ரெடினாவையும் எடுத்து சேர்த்து வைத்து ஒரு சீரியல் நம்பர் போல கொடுக்கிறார்கள். 340,282,366,920,938,000,000,000,000,000,000,000,000 ஜீவராசிகளுக்கு இப்படி பிரத்யேக நம்பர் வைக்கலாம். இரத்தின சுருக்கமாக சொல்வதென்றால் இந்த உலகின் மெம்பர்கள் அனைவருக்கும் ஒரு நம்பர். இதிலேயே நூதன பித்தலாட்டங்கள் நடக்கின்றன. மனிதன் கண்டுபிடித்ததை அதே மனிதனே அழிக்கிறான். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.


பின்னால் என்னை துரத்துகிறார்கள். எந்நேரமும் என்னை நெருங்கலாம். அரசு மைய ஆஸ்பத்திரிக்கு என்னை இழுத்துச் சென்று படுக்கவைத்து என் மூளையை ஓட்ட நறுக்கி எடுத்து விட்டு அந்த இடத்தில் சில்லு பதித்து மனித ரோபோவாக மாற்றலாம். பதித்த சில்லு அவர்கள் சொல்லுவதை அடி பிறழாமல் செய்து நடைப்பிணமாக என்னை ஆக்கலாம். அரசு கருவூலத்தில் நோட்டு என்னும் வேலைக்கு ஒரு ஓரத்தில் தரையில் சம்மணமிட்டு உட்கார்த்தி வைக்கலாம். சாப்பிடு சொன்னால் சாப்பிடலாம். தூங்கு என்றால் தூங்கலாம்.

இப்போதெல்லாம் யாருக்கும் சிறைவாசம் கிடையாது. மரண தண்டனை கிடையாது. தக்க தண்டனை தருவதற்கு மருத்துவ வில்லன்கள் போதும். போன வாரம் காலேஜ் செல்லும் பெண் பிள்ளையை பார்த்து விஷமம் செய்தவனை கொண்டு போய்  'காம்னோ' அறுவை சிகிச்சை செய்தார்கள். அண்ணனுக்கு இனிமேல் 'அந்த' ஆசையே துளிர்க்காத மாதிரி காமத்தையும் காதலையும் தூண்டும் ஹார்மோன்கள் அனைத்தையும் மொத்தமாக உருவி ஒரு குடுவையில் அடைத்து ஹார்மோன் வங்கியில் சீலிட்டு அடைத்துவிட்டார்கள். தெருவில் வயசுக்கு வந்தப் பெண்களுக்கு தைரியமாக அவனை பாதுகாப்புக்கு வைத்துவிட்டு பெற்றோர்கள் டாட்டா செல்கிறார்கள். இப்போது கா மற்றும் கா இரண்டிலும் மலடனாக வீதிகளில் திரிகிறான்.

நான் ஒரு கன்னியின் விருப்பமில்லாமல் அவள் பூங்கரம் பற்றி இழுத்திருக்கிறேன். இதற்கு என்ன தண்டனையோ தெரியவில்லை. கவர்ன்மென்ட் வெப் சைட்டில் விலாவாரியாக போட்டிருப்பார்கள். அந்த கண்காட்சியின் ஒவ்வொரு சாரியின் வழியாக ஜன நெருக்கடி மிகுந்த இடங்களில் புகுந்து புகுந்து ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தேன். இன்னமும் இவ்வளவு பேர் சைவம் சாப்பிடுவது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. மரம் செடி கொடிகள் வளர்வது பிரம்மப்ரயர்த்தனமாக இருக்கும் இவ்வேளையில் இக்கடைகளில் வரிசையில் நின்று மரக்கறி புசிக்கிறார்கள். கஷ்டப்பட்டு வளர்ந்த காய்கள் அவர்களை மன்னிக்கட்டும்.

காய்கறிக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருந்தது. பெண்களின் விரல் நீளத்திற்கு கொண்டையில் சிகப்பாக நெயில் பாலிஷ் போட்டது போன்ற வெண்டைக்காய்கள் கிலோ கிலோவாக விற்றார்கள். அந்தக் கடையில் கூட்டம் அலைமோதியது. எவ்வளவோ விஞ்ஞானத் தொழில்நுட்பங்களில் இந்த தேசம் தன்னிறைவு பெற்றிருந்தாலும் 'தன்' நிறைவு பெறாத ஒரு விஷயமாக இன்னமும் ஆண்-பெண் உறவு நிலவுகிறது. மாறாக ப்ரோக்ராம் செய்யப்பட ரோபோக்கள் நம்மை அதன் அன்பிலும் பாசத்திலும் குளிப்பாட்டுகின்றன. இரும்பு இயந்திரங்கள் எல்லா இடத்திலும் ஆட்சி புரிந்தன. மிகவும் நமைச்சல் எடுக்கும் குஜால் அன்பர்கள் ரோபோக்களின் தானியங்கி உல்லாச விடுதிகளுக்குச் சென்று சுகமாக வார்ப்பிரும்புகளில் வகையாக ரத்தம் வர சொரிந்து கொண்டார்கள்.

இந்தக் கண்காட்சி கூட்டத்தில் சரி பாதி மெட்டல் மனிதர்களும் உலவினார்கள். ஏதாவது ஒரு ரோபோவின் கட்டுப்பாட்டுக்குள் ரேடியோ அலைவரிசையில் அணிமா சக்தி போல உள்ளே நுழைந்து கூட என்னை போலீசார் வேவு பார்க்கலாம்.என்னை எதற்காக துரத்துகிறார்கள் என்று உங்களுக்கு சொல்லவே இல்லையே. இருங்கள் பிடித்துவிடப் போகிறார்கள். அரசுத் தொழிற்சாலைக்கு போட்டியாக ஆரம்பித்த எங்கள் அம்மாப்பலகை கம்பெனியில் என்னை ஒரு துரும்பாக உட்கார்த்தி வைத்து தரம் காண உபயோகித்தார்கள். ஆனால் என்னுடைய சாஃப்ட்வேர் அறிவு பல பெர்முடேஷன் காம்பினேஷனில் தப்பிக்கும் வழிகளை இங்கு ஆராய்கிறது.

கண்காட்சியின் கொல்லைப் பக்கம் ஆளில்லா அந்தக் கடைசி கீரை அப்பளக் கடையை அடைந்துவிட்டேன். அந்தக் கடையை தாண்டி பச்சை லேசரினால் கதிர் கம்பி அடித்து வேலி அமைத்திருக்கிறார்கள். யாராவது அந்தக் கதிர்களை கடந்தால் அலாரம் அடித்து அனைவரையும் எழுப்பும். லேசர் கதிர் படும் இடங்களில் அங்கஹீனம் நிச்சயம். இந்த லேசர் வேலியின் பிரதான பீம் அடிக்கும் லேசர்கன்னை இயக்கும் அறை அருகில் ஒரு கழிப்பறை ஓரம்  இருந்தது. அறை உள்ளே ஒரு பிசாத்து இரண்டாம் தர ரோபோவை காவலுக்கு வைத்திருந்தார்கள். பக்கத்தில் ஒரு எலி ஓடினால் ஓடிப்போய் பிடிக்கும் அளவிற்கு அது திறமைசாலி. என்னுடைய ப்ளூடூத்தினால் அதை ஹேக் செய்தேன். ஒரு நிமிடம் மோதிப் பார்த்தது. கடைசியில் அடிபணிந்தது. அதனுடைய 32 bit திறனுக்கு ஏற்ப ஃபிபனோக்கி நம்பர்களை மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கும் வேலையை நிற்காமல் infinite தரம் தொடர்ந்து செய்யும் ஒரு முடிவில்லா நிரலியை அதனுள் திணித்தேன். தண்டம் உட்கார்ந்து பொறுமையாக அதைச் செய்து செய்து வெளியே துப்பிக் கொண்டிருந்தது. நிதானமாக அந்த அறைக்குள் சென்று கதிர்களின் வீச்சுத் தரத்தை கணினியில் உட்கார்ந்து எழுபத்தைந்து சதம் குறைத்தேன். மொத்தமாக நிறுத்தினால் மாட்டிக்கொள்வேன்.

என் கட்டளையை அந்தக் கம்ப்யூட்டர் சிரமேற்கொண்டு சுலபமாக ஏற்றது. அந்த வேலிக்கு இடையில் ஒரு தும்பி போல நுழைந்து சுதந்திரமாக வெளியே வந்தேன். சில்லென்று காற்று வீசி என் கேசத்தை கலைத்தது. ரொம்ப நேரம் அங்கே நிற்பது ஆபத்து. ஆகாயத்தில் போக்குவரத்து குறைந்திருந்தது. அண்ணாந்து பார்த்து குனிவதர்க்குள் மின்னல் வேகத்தில் ஒரு வாகனம் என்னருகில் வந்து இறங்கியது. "பர்ர்ரர்...க்" என்ற வினோத ஓசையுடன் அதன் கதவு திறந்தபோது நான் செய்வதறியாது நின்ற தருணத்தில் ஒரு கை என்னை சரெக்கென்று உள்ளே இழுத்து மூடிக் கொண்டது. பச்சையும் நீலமுமாய் விளக்குகள் எரிந்த அந்த விசித்திரமான வான ஊர்தியின் உள்ளே நான் கண்ட காட்சி....
விஞ்ஞானம் வளரும்...
பட உதவி: io9.com
-

43 comments:

எல் கே said...

ஹ்ம்ம் என்ன ஜீவிதா இருந்தாளா உள்ளே இல்லை போலீசா ?? நடத்தும் மைனர்வாள்

Balaji saravana said...

சக்கை போடு போடுறீங்க அண்ணா!. கீப் ராக்கிங்..
என்னோட டாஷ் போர்ட்ல உங்க பதிவு அப்டேட் ஆகவே மாட்டேங்குது?!

மாதேவி said...

ம்...விறுவிறுப்பாய் விஞ்ஞானத் தொடர் தொடரட்டும்....

வெங்கட் நாகராஜ் said...

உள்ளே இழுத்த கை - ஜீவிதாவா... நடக்கட்டும் நடக்கட்டும்.....

! சிவகுமார் ! said...

//என் நாக்கு வரண்டது//
வறண்டது?

Font சைஸ் சிறியதாக உள்ளது. சற்று பெரிதுபடுத்த முடியுமா?

கடினமான முயற்சிக்கு வாழ்த்துகள்.

siva said...

ஏதோ ஒரு சுஜாதா நாவெல் படித்த அனுபவம்
அருமை முதலில் புரிய விட்டாலும் மறுமுறை படிக்க கொஞ்சம் கொஞ்சம்
நல்ல இருக்கு உங்கள் கற்பனை ...

கக்கு - மாணிக்கம் said...

அச்சு அசப்பில் அப்படியே நம்ம குருநாதர்தான். எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. ஒரு வேலை இந்த RVS கூட ஒரு ரோபோ தானோ?!

கக்கு - மாணிக்கம் said...

///தானியங்கி உல்லாச விடுதிகளுக்குச் சென்று சுகமாக வார்ப்பிரும்புகளில் வகையாக ரத்தம் வர சொரிந்து கொண்டார்கள்.//

ஐயோ ....அது வார்ப்பிரும்களாய் இருக்காது மைனரே! சிலிகான், ரப்பர் போன்ற பாலி யூரித்தேன் சமாச்சாரமாம். நம்ம குரு கூட ஒரு தடவை ஜப்பான் போயிருந்த
போது இந்த வகை "பொம்மைகளை " அங்கு கண்டு அது பற்றி கூட ஒரு சிறு குறிப்பு எழுதியிருந்த ஞாபகம்.இதுபற்றி யாராவது விலாவாரியா எழுங்க புண்ணியமா போகும்!
:))))

RVS said...

@எல் கே
அது சஸ்பென்சு... ;-))

RVS said...

@Balaji saravana
பாராட்டுக்கு நன்றி தம்பி. டேஷ்போர்ட் அப்டேட் என்ன செய்யறதுன்னு தெரியலை... ;-)))

RVS said...

@மாதேவி
நன்றி. ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
எல்.கே வுக்கு சொன்னது தான்... சஸ்பென்சு.. சஸ்பென்சு... ஹி.,.ஹி.. ;-))

RVS said...

@! சிவகுமார் !
Typo கரெக்ட் பண்ணிட்டேன். நன்றி.
கஷ்டம்தான்... முடிந்த வரை நன்றாக தர முயற்சி செய்கிறேன். ;-))

RVS said...

@siva
அய்யய்யோ... அந்தளவுக்கு தூக்காதீங்க... பயம்மா இருக்கு... பாராட்டுக்கு நன்றி சிவா! ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
மாணிக்கமே!
மலை எங்கே மடு எங்கே!
பாராட்டுக்கு மிக்க நன்றி. ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
வார்ப்பிரும்பு 'அந்த' மேட்டருக்காக எழுதலை... பொதுவில் ரோபோக்களின் தன்மைக்காக எழுதினேன். தவறாக புரிந்து கொள்ளும்படி எழுதிவிட்டேனோ? இனிமேல் சரியாக செய்கிறேன். கவனித்து கருத்துரைத்தமைக்கு நன்றி. ;-))

அறிவன்#11802717200764379909 said...

இந்த சிடி செம ஸ்பீடு..
கதையும் பாட்டையில் விழுந்து எளிதாகச் செல்கிறது..

||மூச்சடைக்கும் விதமாக மேலாடை உடுத்திருந்தவளை பார்த்து||

அவளுக்கு மூச்சடைக்கவா அல்லது ஜீவனுக்கு மூச்சடைக்கவா?

அல்லது உங்களுக்கா??!

மைனர் என்று பலர் அழைப்பது இதனால்தானா??

Madhavan Srinivasagopalan said...

முதல் பாகமே இன்னும் படிக்கலை..
படிச்சிட்டு வாரன்.. அப்புறமா..

கோவை2தில்லி said...

த்ரில்லிங்கா இருக்கு! தொடருங்கள்.

A.R.RAJAGOPALAN said...

யூகிக்க முடியாத வியுகம் , சக்கரத்தில் தொடங்கி பத்மத்தில் முடிக்கின்ற லாவகம்
சட சட வென எடுக்கும் வேகம் , வேரூன்றிய விவேகம் இது விவரிக்க முடியா வினோதம்
அடிச்சு தூள் கிளப்பு வெங்கட் ...
கதைக்கு நீ தேர்ந்தெடுக்கும் படங்கள், படாடோபம் போ.................

பத்மநாபன் said...

படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியா வேகம்... அடுத்த பகுதியை உடனடியாக தேடும் ஆர்வம் ...இதுவே அறி-புனைவு தொடரின் வெற்றி..வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்

இளங்கோ said...

வார்த்தைகளில் விளையாடி இருக்கீங்க
அண்ணா..
கதை சூப்பரா போய்கிட்டு இருக்கு..

ரிஷபன் said...

நம்ப முடியாத அளவு விறுவிறுப்பு வார்த்தைகளில் சரளமாய் விளையாட்டு ஜமாய்ங்க

ஸ்ரீராம். said...

பயப்பட வேண்டாம் உள்ளே வண்டிக்குள் இருப்பது நிச்சயம் எதிரி இல்லை....விட்டு விட்டு (பதிவிடும் இடைவெளி) வேகமாகப் போகிறது...!

! சிவகுமார் ! said...

பதிவுலக சுஜாதா....சந்தேகமே இல்லை ஆர்.வி.எஸ். நீங்கள் எத்தனை முறை மறுத்தாலும் அதுதான் உண்மை. வாழ்த்துகள்!

சுந்தர்ஜி said...

ஸ்வாரஸ்யம் ஆர்விஎஸ்.

ஆனாலும் சம்பவங்கள் மிகக் குறைச்சலாக இருப்பதால் வழக்கமாய் கடுகுக்குள் நூறு விதமான கேரெக்டர்களைப் புகுத்திவிடும் உங்கள் பாணி ஜீவனையும் ஜீவிதாவையும் சுற்றியே சுழல்வது ஒரு அலுப்பைத் தருகிறது.

இந்தக் கதையின் பலமும் பலவீனமும் அதுதான்.தொடரட்டும்.

தக்குடு said...

மைனர்வாள், பொதுவா இந்த கதை கத்திரிக்காய்(அதுவும் தொடர்கதை)மேல எனக்கு கொஞ்சம் நாட்டம் குறைவு. ஆனா இப்போ உங்க கதையை படிச்சுண்டு இருக்கேன். சுவாரசியம் கொப்பளிக்கும் காட்சி அமைப்புகள். வாழ்த்துக்கள்.

குறிப்பு - தின்னவேலி கல்லிடை சிறுவன் பகுதியையும் ரசித்தேன்..:)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

//பதிவுலக சுஜாதா....சந்தேகமே இல்லை ஆர்.வி.எஸ். நீங்கள் எத்தனை முறை மறுத்தாலும் அதுதான் உண்மை// correct. வாழ்த்துகள்!

Tuesday, April

RVS said...

@அறிவன்#11802717200764379909
இந்த மூச்சடைக்கும் விவகாரம் வாசகர்களின் கருத்துக்கு விட்டுவிட்டேன். ;-))
பாராட்டுக்கு நன்றி. ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
பொறுமையா படிச்சுட்டு வா மாதவா! நன்றி. ;-))

RVS said...

@கோவை2தில்லி
நன்றி சகோ.;-) தொடர்ந்து படியுங்கள். ;-))

RVS said...

@A.R.RAJAGOPALAN
நன்றி கோப்லி உன்னுடைய தொடர் ஊக்கத்திற்கு.. ;-)))

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. இதை எப்படி முடிக்கப் போகிறோம் என்ற பயம் இப்போது வந்து தொற்றிக்கொண்டது. ;-))

RVS said...

@இளங்கோ
தொடர் வாசிப்பிற்கு மிக்க நன்றி இளங்கோ! ;-))

RVS said...

@ரிஷபன்
சார்! பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லோர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டும்.. முயற்சி செய்கிறேன். ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
புரிஞ்சிகிட்டேன். சீக்கிரம் பதிவிட முயற்சி செய்கிறேன். நன்றி ஸ்ரீராம். ;-))

RVS said...

@! சிவகுமார் !
ஐயோ.. துரத்தி அடிக்கறா மாதிரியே இருக்கே!! ரொம்ப நன்றி சிவகுமார். அவர் மலை நான் மடு... ;-))

RVS said...

@சுந்தர்ஜி
ஜி! புரிந்து கொண்டேன்... பாகம் நகர்ந்தால் இன்னும் கொஞ்சம் கரெக்டர் கூடும். இப்போது எனக்கு என்ன பயம் என்றால் இது நாவல் போல நீண்டுவிடுமோ என்பதுதான்.. யாருக்கு பொறுமை இருக்கும் படிப்பதற்கு...
சீக்கிரம் முடிக்கவும் கோர்க்கவும் முயல்கிறேன். கருத்துக்கு நன்றி... ;-)))

RVS said...

@தக்குடு
கண்ணே! கல்லிடை உன் நினைவில் உனக்காக எழுதியதான்.

எனக்கு தெரியும் நீங்கள் கதைப் படிக்க வரமாட்டீர்கள் என்று.. இப்போது வந்து படிப்பது எனக்கே ஆச்சர்யம்.. நன்றி. ;-))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
மேடம்.. நீங்களுமா? ;-)

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. ;-))

சிவகுமாரன் said...

ஜெட் வேகத்தில் பறக்குது கதை. தக்குடுவுக்கும் நம்பர் கொடுத்திட்டீங்களே . நாங்கல்லாம் எங்க உலகத்தில உண்டா ?
-- கக்கு மாணிக்கம் போல , எனக்கும் வார்ப்பிரும்பு சமாச்சாரம் , சரியா தோணலை. வாத்தியார் எழுதின மாதிரி சிலிகான் ரப்பர் தான் பொருந்தும் .

அப்பாதுரை said...

இந்தக் காதல் தொல்லை தாங்க முடியாது போலிருக்கே? நல்லாத்தான் எடுத்துட்டுப் போறீங்க..

கக்கு சார்: பொம்மை காலம் எல்லம் போயிடுச்சு போன் நூற்றாண்டோடே. பெட்டி போல் ஒரு குட்டி அறைக்குள்ளே வெறும் காற்றலைகளை வைத்துக் கொண்டு ஜீவாத்மா-பரமாத்மா வித்தைகள் செய்கிறார்கள். $7300 டாலருக்கு - சாரி $73000 டாலருக்கு ஒரு பெட்டி கிடைக்கிறது. 'சுகம் தானா சொல்லு கண்ணே' என்கிறது உள்ளே நுழைந்தவுடன். அப்புறம்..

RVS said...

@அப்பாதுரை
அது என்ன பொட்டி சார்! அறிந்த கொள்ள ஆவலாய் இருக்கிறது. (அறிந்து கொள்ள மட்டும்.....) ;-)))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails