Friday, May 20, 2011

வெல்வதில் வேட்கை


அது ஒரு இரும்புத் தொழிற்சாலையின் மாலை நேரம்.
"ஏன் இப்படி?" என்று முகம் சுளித்தார் அந்த தொழிற்சாலையின் தலைமை அதிகாரி.

"தெரியலை.." தலையை குறுக்குமடுக்காக பெண்டுலமாக ஆட்டினார் அத்தொழிற்சாலையின் இந்த சிக் யூனிட்டின் மானேஜர். தலையாட்டலில் கழுத்தில் டை தாண்டவமாடியது.

"உன்னைப் போல திறமை மிக்க மேலாளராலேயே உற்பத்தியை பெருக்க முடியவில்லை என்றால்...ஹெ..ஹ்..ஹே..." பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே கேட்டார் தலைமை அதிகாரி.

"என்ன செய்வது. தோள் மேல் கை போட்டு தோழமையோடு கேட்டேன். மரியாதையாக வேண்டுகோள் விடுத்தேன். அதிகாரப்பூர்வமாக மிரட்டினேன். அசிங்கமாக திட்டினேன். ஓட ஓட விரட்டினேன். ஒருவரும் எதற்கும் மசியவில்லை." சோகத்தோடு சொன்னார் அந்த மேனேஜர்.

இந்த சம்பாஷனை நடந்தது மாலை ஆறு மணிக்கு. இரவு நேர தொழிலாளர்கள் இன்னமும் வேலைக்கு ஃபாக்டரிக்குள் நுழையாத காலம். "காலையிலிருந்து இதுவரை இன்றைக்கு எவ்வளவு இரும்பு துண்டுகள் உற்பத்தி செய்தார்கள்?" என்று மேனேஜரிடம் கேட்டார் முதலாளி. "ஆறு" என்று சோகமாக சொன்னார் மேனேஜர். அவரிடம் ஒரு சாக்கட்டி கேட்டார். அந்தத் தொழிற்சாலையின் உற்பத்தி நடக்கும் பிரதான கூடத்திற்கு வந்து தரையில் பெரிதாக "6 என்று எழுதினார்.  வேறு ஒன்றும் பேசாமல் காரேறி சென்றுவிட்டார்.

இரவு நேரப் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அந்தப் பெரிய எழுத்தில் ஹாலில் நடுநாயகமாக வீற்றிருந்த 6 என்ற எண்ணை பார்த்தார்கள். "என்ன இது?" என்று பகல் நேரப் பணி முடிந்து செல்லும் சக தொழிலாளிகளிடம் கேட்டார்கள். "காலையில் பெரியவர் வந்தார். எவ்வளவு உற்பத்தி செய்தோம் என்று சொன்ன நம்பரை இவ்வளவு பெரியதாக நடு ஹாலில்  எழுதிவிட்டு சென்றுவிட்டார்" என்று பதிலளித்தார்கள்.

மறுநாள் காலையில் பகல் நேரப் பணிக்கு வந்த பணியாளர்கள் "7" என்று கொட்டை எழுத்துக்களில் இருந்ததைப் பார்த்து வெகுண்டார்கள். ஆவேசத்துடனும் முழு ஆர்வத்துடனும் உழைத்து இரவு நேரத் தொழிலாளிகள் வேலைக்கு வருவதற்கு முன்னர் அந்த 7 ஐ அழித்து விட்டு "10" என்று குண்டாக எழுதிவைத்து விட்டு போனார்கள்.

தொழிலாளர்களிடம் இது ஒரு தொற்றுவியாதி போல பீடித்தது. மிகக் குறைந்த நாட்களிலேயே அந்த யூனிட் படிப்படியாக முன்னேறி ஏனைய எல்லா யூனிட்டைக் காட்டிலும் உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்தது. 

இது நடந்தது ஒரு காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனமான பெத்லஹெம் ஸ்டீல் கம்பெனியில். அந்த அதிகாரி Charles Michael Schwab ஆவார். சக தொழிலாளிகளிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியை தூண்டுவதன் மூலம் அந்த உற்பத்தியற்றுக் கிடந்த யூனிட்டை முன்னேற்றிக் காட்டினார். இவரது அந்தரங்க வாழ்க்கை முதற்கொண்டு இவரைப் பற்றி பல தகவல்களை விக்கிபீடியா சொல்கிறது. இருந்தாலும் ஒரு வார்த்தை யாருடனும் பேசாமல் அவர்களை திறம்பட வேலை செய்ய வைத்த வித்தை என்னை மலைக்க வைக்கிறது. இந்த உத்தியை வேறு தொழிற்சாலைகளில் உபயோகிக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்றாலும் இதன் உட்கருத்தை புரிந்துகொண்டால் சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?

பின் குறிப்பு: படமும் விஷயமும் எடுத்த தளம் http://schwabmethod.com/

-

50 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

A.R.RAJAGOPALAN said...

மிக சுவரஸ்யமான
அற்புத யுக்தி

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

அமைதி அப்பா said...

எந்தக் காலத்திலும் இந்த நடைமுறை பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நல்ல செய்தியை சொல்லியுள்ளீர்கள், நன்றி.

*********************
நான், என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் படிச்சிப் பாருங்களேன்.


தமிழனைத் தலை நிமிரச் செய்த சாதனைப் பெண்!

நன்றி.

Madhavan Srinivasagopalan said...

சம்பந்தப் பட்டவர்களை மோடிவேட் செய்வது ஒரு கலை ஆகும்.
அதனை சிறப்பாகச் செய்தார்..
நல்ல தகவல்..

சுந்தர்ஜி said...

100/100

ஜிஜி said...

வேலையத் தூண்டுவதற்கான அருமையான யுக்தியைக் கையாண்டிருக்கிறார்.பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

கக்கு - மாணிக்கம் said...

என்ன மைனர் MBA எதுவும் செய்யும் நோக்கமா?

எல் கே said...

கால் சென்டரில் இந்த வழிமுறை உண்டு

Ramani said...

இதைத்தான் சொல்லாமல் சொல்லுவது என்றார்களோ
தெளிவூட்டும் நல்ல பதிவு

பத்மநாபன் said...

உத்வேகம் கொடுக்கும் யுத்தி...கொத்தவேண்டாம் இந்த மாதிரி சீறவாவது வேண்டும்..

அப்பாவி தங்கமணி said...

Wow...nice to know... a must read fact...

மோகன்ஜி said...

அருமையானப் பதிவு ஆர்.வீ.எஸ்!

இந்தப்பதிவை நான் போட்டிருந்தேனேயானால் நீர் என்ன கேட்டிருப்பீர் என யோசிக்கிறேன்!
(அண்ணா! இதே யுக்தியை காதலில் கைபிடிக்கலாமா?)

அருமை ஆர்.வீ.எஸ் சரிதானே?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யுக்தி. நீங்கள் படித்ததை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி மைனரே…

மோகன்ஜிக்கு இன்னும் பதில் சொல்லலையே அண்ணா… சீக்கிரம் சொல்லுங்க… காதலில் இது உதவுமா? சொன்னா நிறைய பேருக்கு உதவுமில்ல….

siva said...

Really nice post..

simple and use full..

vaalga valamudan.

siva said...

தருவது 50/100 மார்க்????

methi...

i will give 110/100 to your post..

சூரியப்பிரகாஷ் said...

படித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி.......

அருமையான பதிவு...

அப்பாதுரை said...

nice

ரிஷபன் said...

தூண்டுதல் அகம் புறம் என்று இரு ரகம்.
இது அகத் தூண்டுதல்..

Matangi Mawley said...

Amazing! wish there could be more people who motivate like this! really brilliant!

thanks for sharing!!

இராஜராஜேஸ்வரி said...

சக தொழிலாளிகளிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியை தூண்டுவதன் மூலம் அந்த உற்பத்தியற்றுக் கிடந்த யூனிட்டை முன்னேற்றிக் காட்டினார்.//
பகிர்வுக்கு நன்றி....

சிவகுமாரன் said...

இந்த யுத்தியை நாங்களும் பின்பற்றுகிறோம். டீம் மெம்பெர்ஸ்களை மூன்று பிரிவாக பிரித்து இருக்கிறோம். ஒவ்வொரு ஷிப்டின் உற்பத்தியை நோட்டீஸ் போர்டில் போடுகிறம். மாத இறுதியில் , அந்தந்தக் குழுவின் தலைவர்களை power point presentation செய்ய வைக்கிறோம்.
அந்த ஸ்டீல் நிறுவன அதிகாரிக்கு நன்றிகள்.

கோவை2தில்லி said...

தாங்கள் படித்த நல்ல விஷயத்தை எங்களுக்கும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ.

raji said...

excellant post.porkizhi order koduthurukken.ready aanadhum kuduthudaren.

சாய் said...

இப்படி போட்டு போட்டு பார்த்து வாங்கி தான் நான் கர்நாடகாவில் இருக்கும்போது தமிழ்நாட்டு கலீக் நன்கு செய்கின்றான் என்று உசுபேத்தி உசுபேத்தியே என் பாஸ் மயூர்நாத் (சொனட்டாவில் சாப்ட்வேர் கம்பனியில் வேலை பார்க்கும்போது) என்பவர் எங்கள் எல்லோரிடமும் நல்ல ஒரு பெர்போர்மான்ஸ் வாங்குவார் !!! மாங்கு மாங்கு என்று போட்டியுடன் வேலை பார்ப்போம். இப்போது மாதிரி செல் போன், ஈமெயில் கிடையாது. வருட கடைசியில் தான் பார்ப்போம் - அப்போது தான் மயூர் எப்படி எங்களிடையே போட்டியை வளர்த்து எங்களிடம் இருந்து மிக சிறந்த திறனை வாங்கினார் ! அவரை பிடிக்காத ஆள் கிடையாது.

RVS said...

@Rathnavel
ரொம்ப நன்றிங்க... ;-))

RVS said...

@A.R.RAJAGOPALAN
ஆமாம்.. நன்றி கோப்லி.. ;-))

RVS said...

@ஷர்புதீன்
நா எப்பவுமே கடைசி மார்க் தாங்க... நல்லவேளை பாஸ் பண்ணிட்டேன்! நன்றி. ;-))

RVS said...

@அமைதி அப்பா
கருத்துக்கு நன்றிங்க... உங்களமாதிரி உபயோகமா ஒரு பதிவு போடலாம்ன்னு தான்.......... ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா! ;-))

RVS said...

@சுந்தர்ஜி
;-)/;-)

RVS said...

@ஜிஜி
கமெண்ட்டுக்கு நன்றிங்க... ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
MCA படிக்கரதுக்குல்லையே நாக்கு தள்ளிடுச்சு... MBA வேறயா?.... போதும்.... போதும் மாணிக்கம்.. ;-))

RVS said...

@எல் கே
தகவலுக்கு நன்றி எல்.கே. ;-)

RVS said...

@Ramani
கமென்ட்டில் பதிவின் சாரத்தை சொன்னதற்கு நன்றி சார்! ;-))

RVS said...

@பத்மநாபன்
அது பத்துஜி!..... கொத்தாமால் சீறவேண்டும்... நன்றி.. ;-))

RVS said...

@அப்பாவி தங்கமணி

Thanks Appaavi! ;-))

RVS said...

@மோகன்ஜி
அண்ணா! என்ன நம்பர் போட்டு காதலா? அர்ஜுனனா அல்லது இந்திரனா... ஓவர் குசும்பு உங்களுக்கு... ;-)))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
பதில் சொல்லச் சொல்லி என்னை மாட்டி விடறீங்க... தல... ஏன் இப்படி... ;-)))
கருத்துக்கு நன்றி.. ;-))

RVS said...

@siva

Thanks Siva.... ;-))

RVS said...

@siva
விடுங்க பாஸ்! நாம எப்பவுமே கடைசி பென்ச் தான்... ;-))

RVS said...

@சூரியப்பிரகாஷ்
நன்றிங்க... கருத்துக்கும் முதல் வரவுக்கும்... அடிக்கடி வாங்க.. ;-))

RVS said...

@அப்பாதுரை

Thank you! Why no calling?.. ;-))

RVS said...

@ரிஷபன்
அகத்தூண்டல்... வாத்தை அழகு சார்! ;-))

RVS said...

@Matangi Mawley

Thanks Matangi... ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம்! ;-))

RVS said...

@சிவகுமாரன்
அற்புதம் சிவகுமாரன்! நீங்கள் எந்த கம்பெனி? ;-))

RVS said...

@கோவை2தில்லி
நன்றி சகோதரி! ;-))

RVS said...

@raji
லீவு முடிஞ்சாச்சா! ராஜபாளையம் போயிருந்தேன்! ;-))

RVS said...

@சாய்
சுவையான அனுபவம் சாய்! பதிவா போட்ட்ருக்கலாம் போலருக்கே! நன்றி. ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails