Monday, May 2, 2011

சிலிகான் காதலி - VI

முதல் ஐந்து  ஸிடிக்களின்  தொகுப்பு இங்கே..

தலைநகரில் தனது காதலி ஜீவிதாவை காணாமல் தவித்தான் ஜீவன். ஜீவிதாவை அங்கமங்கமாக அழகில் உயர்ந்த பல நூற்றாண்டு பெண்டிரின் அவயங்களை மாடலாக்கி க்ளோனிங் முறையில் ஒரு டாக்டரின் உதவியோடு செதுக்கியிருந்தான். அன்றைக்கு கண்காட்சியில் அச்சு அசல் ஜீவிதா போலவே ஒருத்தியை பார்த்தான். அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளிடம் பேசிய போது அவள் தன் காதலி ஜீவிதா இல்லை என்று தெரிந்துகொண்டான். பின்னால் துரத்தும் போலீசிடம் இருந்து தப்பிக்க அந்த கண்காட்சியில் இருந்து வெளியே வந்தவனை ஒரு வானூர்தி இழுத்துப் போட்டுக்கொண்டு பறக்கிறது. அந்த வாகனத்தின் உள்ளே கண்காட்சியில் பார்த்தது போல ஏழு ஜீவிதாக்களை பார்க்கிறான். அதிசயத்தில் வாய் பிளக்கையில் அவனுடைய ஜீவிதாவை க்ளோனிங் முறையில் படிமம் எடுத்து அங்கம் அங்கமாக அழகுச் சிலையாக செதுக்கிய டாக்டர் ஜீவனையும் அந்த ஊர்தியில் பார்க்கிறான். நாட்டை இயந்திரங்களிடம் இருந்து காப்பாற்றும் தனது திட்டத்தை விளக்கி அதை செயல் படுத்துவதற்கு ஒரு அத்துவானக் கிராமத்தில் இருக்கும் தனது நண்பன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அவர்கள் ஒரு பாறை மறைவில் தங்களது வானூர்தியை நிறுத்திவிட்டு நண்பனின் வீட்டிற்கு வரும் போது நிறைய ரோபோக்களை பார்த்தார்கள். மேபிள் மரத்தை கட்டிப்பிடித்து தனக்கு தேவையான சக்தியை உறிஞ்சிக்கொண்டார்கள். இதைப் பார்த்துவிட்டு திரும்பிய டாக்டரும், ஜீவனும் டாக்டரின் நண்பர் நரேன் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்குவதற்காக வருகிறார்கள். வீட்டிற்கு வந்த பின் அவர்களது குழுவில் ஒரு ஆள் மிஸ்ஸிங். ஜீவன் அதிர்ச்சியில்..... 
****************** ஆறாவது ஸி.டி **************************

scifi6

நான் திடீர் திக்குவாயனாகி "டா......க்....ட......ர்" என்று திக்கித் திக்கி டாவிலிருந்து ர்வரை மூன்று வினாடிகளில் டாக்டரை என் பக்கம் இழுத்து அழைக்க நடு ஹால் வரைக்கும் குறுக்குவெட்டாக அறை முழுவதையும் அடைத்துச் சென்ற அனைவரும் திரும்பி என்னை விநோதமாக பார்த்தார்கள். அல்சேஷன் நரேன் சார் கைகளில் இருந்து தனக்கு அரைக்கிலோ கிடைக்குமா என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு இரைக்க இரைக்க விறைப்பாக என்னை எட்டிப் பார்த்தது. அதன் கண்களில் பசியார்வம் நிறைந்திருந்தது.

"என்னாச்சு?" என்று நெற்றியில் புதிர்க் கோடுகளோடு கேட்டான் டாக்.

"நம்ம.. நம்ம.. நம்ம டிரைவரைக் காணோம்" என்றேன் ஸெல்ஃப் எடுக்க திணறும் ஆதிகால டாடா கம்பெனி லாரிபோல.

"ரோபோவாக இருந்தால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இவன் கை கால் முளைச்ச மனுஷனாய்ப் பொறந்துட்டானே! எப்டி கண்டு பிடிப்பது" என்று கைபிசைந்து விசனப்பட்டான் டாக்டர். கூட இருந்த எல்லா அப்சரஸ்களும் முகத்தில் ஆச்சர்யத்தை தாங்கினர். அரசாங்கத்தின் பிரத்தியேக கடிகார நெட்வொர்க்கில் சேர்க்கப்பட்ட கவர்ன்மென்ட் முத்திரையிட்ட சுவர்க் கடியாரம் அணைந்து அணைந்து 23:02:00 என்று சிகப்பில் ஒளிர்ந்தது. அதனுடைய கூடுதல் பிரகாசம் டாக்டர் முகத்தில் தேங்கியது. ஒரு பக்க கன்னம் செக்கச்செவேலென சிவந்து கண்கள் உருண்டு ஏதோ மாதிரி நின்றிருந்தான்.

ஹால் சுவற்றில் பதித்த எல்.இ.டி மானிட்டரில் இதுவரை இப்புவியில் இருந்து கண்டு பிடித்த கிரகங்களில் மனிதகுலத்தின் வாழ்வும் அதன் நலமும் என்பது பற்றி ஒரு வானியில் பேரா ஒரு போராட்டத் தொடர் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தார். "செவ்வாய் கிரஹத்தின் வாழ்வாதாரமாக விளங்குவது..." என்று நீலக் கோட்டை நொடிக்கொரு தரம் இழுத்துவிட்டுக் கொண்டு ஒரு மேப்பை பார்த்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். இந்நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கப்போகும் ஒரு முக்கியமான வேலை நிமித்தம் கொள்கையோடு வந்த நாங்கள் இவன் தொலைந்து போனதால் அடுத்தது என்ன? என்று கேள்விக்குறியாக நின்றோம்.

ஊருக்கு புதிகாக இருக்கிறான் என்று யாராவது இவனை மடக்கி விசார்த்தார்கள் என்றால் இவன் எதுவும் உளறித்தொலைத்து விடப் போகிறானே என்று மிகவும் கவலையாக இருந்தது. டாக்டரும் நானும் திரும்ப சென்று பார்க்கலாம் என்று கிளம்பினோம். வாசலைப் பார்த்து அல்சேஷன் கர்...கர்.. என்று ஆரம்பித்து லொள்ளியது. எட்டிப் பார்த்தால் இரண்டு கையிலும் பிரீஃப்கேசுடனும் வாயில் அசட்டுச் சிரிப்புடனும் டிரைவர் நின்றிருந்தான். எங்களுக்கு போன உயிர் திரும்பி வந்தது.

"எங்க போன?"

"நம்மளோட மானிடரிங் கிட் வண்டியிலையே விட்டுட்டு வந்துட்டோம். அதான் ஓடிப்போய் போய் எடுத்துக்கிட்டு வந்தேன்."

"சொல்லிட்டு போமாட்டியா? சரி.சரி.. கொண்டு போய் உள்ளே வை.." என்று ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையை டாக்டர் கை காண்பித்தான். நடுப் பகலிலும் அமாவாசை இரவாக கும்மிருட்டாக இருக்கும் அறை அது. ஒரு மர டேபிள் போட்டிருந்தது. தன்னுடைய பெட்டியில் இருந்து அனைத்து மானிடர், சி.பி.யு, சில சர்க்யூட் போர்டுகள், தாய்ப்பலகைகள், ஏழெட்டு ஸ்டிக்கர் போட்டு ஸைஸ் ஜெட்டா பைட் ஹார்ட் டிஸ்க்குகள், வாய்ஸ் ஸ்டிக் என்று இரண்டு எலக்டிரானிக் கருவி சூப்பர் மார்க்கெட் மெகா ஸ்டோர் வைக்கும் அளவிற்கு இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து கடைவிரித்தான். இப்போது மேஜை நிரம்பியிருந்தது.

"என்ன சாப்பிடுறீங்க?" என்றார் எங்கள் வயிற்றை ரொப்பும் தொனியில் நரேன்.

"ஹா.. ரொம்பப் பசி... வயிறே உன்னோடு வாழ்தல் அரிது... அப்படின்னு இளமையில் கிழப்பருவம் எய்திய பாட்டி முன்னோருகாலத்தில் சொல்லியிருக்காங்க" என்று பழமை பேசி நான் நீட்டி முழக்கினேன்.

"டாக்டர் ஃபிரெண்ட். உங்களோட தலைச்சன் பிள்ளை ஜீவிதா தலைநகரில் என்ன செய்யப் போகிறாள் என்று சொல்றேன்னு சொன்னீங்க! உங்க திருவாய் மலர்ந்தீங்கன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்."

"சொல்றேன்! பயங்கரமா பசிக்குது. சாப்டுட்டு நம்ம கச்சேரியை வச்சுக்குவோமே." என்று எண்சான் உடம்பில் பிரதானத்தை கவனிக்க ஆயத்தமானான் டாக்டர்.

ப்ரெட்குள்ளே கறிகாய்கள் நிரப்பி சண்ட்விச் போல பரிமாறினார். ரத்தம் ஓடும் எல்லோரும் சாப்பிட்டோம். இரண்டு ரோபோ ஜீவிதாக்கள் தங்களது ஜடைக்குள்ளிருந்து வயரை எடுத்து பக்கத்து சுவிட்ச் போர்டில் சொருகி மின்சார சாப்பாடு சாப்பிட்டார்கள். கடைசியில் ரொட்டிகள் தீர்ந்து போனபின்னரும் எனக்கு பசித்தது. கையில் ஒரு ரொட்டித் துண்டுடன் இருந்த டாக்டரிடம் இருந்து வாங்கி நரேன் ஒரு காரியம் செய்தார். ஒரு சிறிய அவன் போல இருக்கும் ஒரு எலக்ட்ரானிக் பெட்டிக்குள் அந்த ரொட்டியை வைத்தார்.

"டூ மினிட்ஸ்"  என்று என்னைப் பார்த்து சிரித்தார்.

இரண்டு நிமிடங்களில் அந்தப் பெட்டியில் இருந்து இரண்டு ரொட்டித் துண்டுகளை வெளியே எடுத்தார். முதல் ரொட்டித் துண்டு அது போலவே அதே அளவில் அதே மாதிரி இன்னொரு துண்டை பிரசவித்திருந்தது. நான் டாக்கை பார்க்க வழக்கம் போல அவன் விவரித்தான்.

"அதுக்கு பேர் ரெப்ளிகேடர். ரெண்டு நூற்றாண்டுக்கு முன்னாடி பேப்பர்களை வைத்து பிரதி எடுத்துக் கொண்டிருந்தார்கள். விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அணு அணுவாக பிரதி எடுத்து சேர்த்தால் மீண்டும் அதே போன்ற ஒரு பொருள் உருவாக்க முடியும் என்ற விதி இருப்பதால் இப்போது இதைக் கண்டு பிடித்தோம்."

எனக்கு பிரமிப்பால் வயிறு நிரம்பியது. ஒரு துண்டு கடித்ததுப் பார்த்தேன். அதே சுவை! அதே குணம்!! அதே தரம்!!! 

இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சாப்பாடு கிடைக்கதவனுக்காக பாடியவனைக் கூப்பிட்டு காண்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த அவன் போன்ற பெட்டி அக்ஷயப் பாத்திரமாகத் தெரிந்தது எனக்கு.

ஒரு ஓரத்தில் அல்செஷனை கட்டிப் போட்டு தரையில் உட்கார வைத்திருந்தார் நரேன். டேபிளில் அவர் உணவு பரிமாறிய விதமே அலாதியானது. பண்பும் பரிவும் நிறைந்து அமிர்தமாக இருந்தது உணவு.

சாப்பிட்டு முடித்ததும் அடுத்த நாள் ஆரம்பித்து இருபது நிமிடங்கள் ஓடியிருந்தன. கம்ப்யூட்டரை  ஆன் செய்து அது கலர் விரிய திறந்து கொள்ளும் வரை காத்திருந்தான். சட்டென்று ஒரு சின்ன குரங்கு வந்து மானிட்டரில் இருந்து டார்ச் அடித்து அவனைப் பார்த்தது. தலையை குனிந்து கண்களை அந்த டார்ச்சுக்கு நேரே டாக்டர் காண்பித்தான். கேக்கீகே... என்று சிரித்துவிட்டு டார்ச்சை கீழே போட்டுவிட்டு திரைக்குள்ளே ஓடியது. கடவுச்சொல்லை தட்டி அந்தரங்க அப்ப்ளிகேஷன்களுக்கு மவுசை தட்டினான். Connecting..... என்று ரவுண்ட் ரவுண்டாக சுற்றிக்கொண்டே வந்தது... சட்டென்று திரையில் ஒரு அறை போன்று தோன்றியது. நன்றாக சுத்தமாக துடைத்த பளிங்குக் கற்கள் பதியப்பட்ட தரை. சுற்றிலும் வெள்ளை வெளேரென்று இருந்தது சுவர். ஒரு எறும்பு மூலையில் ஊர்ந்தாலும் தெரியும் வெண்மை அது. சுவற்றில் ஆங்காங்கே சதுரமாகவும், வட்டமாகவும் ஏதேதோ மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. அது ஒரு அலங்கரிக்கப் பட்ட படுக்கையறை போலவும் இருந்தது. மூலையில் ஒரு வர்ணம் தீட்டப்பட்ட பெரிய ஸ்டீல் முக்காலி நிறுத்தி சிவப்பு, மஞ்சள் பூக்கள் நிரப்பிய பூச்சட்டி வைத்திருந்தார்கள். எங்கிருந்தோ நேரடி ஒளிபரப்பு போல இருந்தது.

திரையில் ஓடுவதை அனைத்து ஜீவிதாக்களும் முட்டிக்கால் மேல் முகத்தை வைத்துக்கொண்டு காலை இறுகக் கட்டிக்கொண்டு ஒரு சினிமாப் படம் போல ஆர்வமுடன் பார்த்தனர். டாக்டர் எதுவும் விவரிப்பான் என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும் மௌனமாக கணினித் திரையை விழியாகலாது பார்த்துக்கொண்டிருந்தனர். அல்சேஷன் நாக்கு மட்டும் வெளியில் நீட்டி காதை தூக்கி கிளிப் போட்டு விட்டதை போல உயரே எழுப்பி பார்த்துக்கொண்டிருந்தது.

திரையில் ஒரு மென்பொருளை உசுப்பி Remote Invocation என்ற மெனுவை தட்டி உள்ளே சென்றான். எதிர்ப் பக்கத்தில் இருந்து சில வினோத சப்தங்கள் இப்போது கேட்டன. மேஜையில் கிடந்த ஹெட் ஃபோனை எடுத்து தலைக்கு மாட்டிக்கொண்டான் டாக்.

"ஜீவி ஒன்.. ஜீவி ஒன்.. டாக் ஹியர்....." என்று வாய்க்கருகில் மைக்கை சரிசெய்துகொண்டே கூப்பிட்டான்.

"எஸ் டாக்டர்..." என்று இங்கு தேன் சொட்டும் குரலில் மதுர மொழி பேசியது ஸ்பீக்கர்.

சுற்றிலும் அமர்ந்திருப்போரை பார்த்து சிரித்தான் டாக்டர். நிஜ ஜீவிதாவின் கண் ஜாடை ஸ்பீக்கர் குரலை ஆச்சர்யித்தது. டாக்டர் என்னைப்   பார்த்து

"புரிந்ததா ஜீவன்?"

"என்ன?"

"இப்போது நீ பார்த்த அந்த ரோபோ ஜீவிதா இத்தேசத்தின் தலைமை கட்டுப்பாடு நிலையத்தில் இருக்கிறாள்."

"என்னவாக?"

"தலைமைச் செய்தி அதிகாரியின் காதலியாக...."

"இவளை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்."

"இந்த தேசமே கம்ப்யூட்டர் வாயிலாக இயங்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டன.."


"புரிந்தது.." என்றேன்.

நாங்கள் பார்த்துகொண்டு இருக்கும் போதே அந்த வெண்பளிங்கு அறையில் ஒரு மீடியம் சைஸ் பூசணிக்காய் தொப்பையுடன் ஒருவர் உள்ளே நுழைந்தார். அரைக்கை வைத்த கருப்பு டி-ஷர்ட் அணிந்திருந்தார். இடையில் ஒரு கருப்பு பெர்முடாஸ். அவர் கண்களில் சாராயம் தெரிந்தது. "ழீவிழா" என்றார். அதில் சாராயம் வழிந்தது. அவள் ஒயிலாக நடந்து அவர் அருகே சென்றாள். அவருடைய சொட்டைத் தலை முத்துமுத்தாய் வேர்த்திருந்தது. தள்ளாடினார். கைத்தாங்கலாக அவரைக் கொண்டு வந்து கட்டிலில் கிடத்தினாள். அவளுடைய கையைப் பிடித்து இழுத்தது அந்த பூ.தொப்பை. இவள் உதறினாள். "வாழி".... என்று அவர் இழுக்க.. இவள் உதற... இழுக்க... உதற... இழுக்க... உதற... "ட்ரப்..ப்..பப்...ப்..." என்ற ஒலிகளுடன் நரேன் வீட்டில் இருந்த எங்கள் மானிடர் முகத்தில் சேற்றைக் குழைத்து பூசியது போல கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகி சட்டென்று ஒன்றும் இல்லாமல் சூன்யமாகியது. கம்ப்யூட்டர் ஓடிக்கொண்டிருந்தது. எதிர்முனையில் இருந்து நேரடி ஒளிபரப்பு நின்று போயிருந்தது. இப்போது அறையில் நிசப்தம் நிலவியது. அதைக் கலைக்கும் விதமாக நாய் எழுந்து திரையைப் பார்த்து "லொள்.. லொள்.." என்று பேசியது.

நாங்கள் ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டோம். டாக்டர் முகத்தை கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டான். முழுதாக மின்சாரம் ஏறிய ஜீவிதாக்கள் இருவரும் ஒயரை உருவி ஜடைக்கு பின்னால் இழுத்து கிளிப் போல போட்டுக்கொண்டார்கள். பார்க்க புத்துணர்ச்சியோடு இருந்தார்கள். தேகத்தில் ரத்தம் பாய்துகொண்டிருந்த எல்லோரும் தளர்ச்சியாக இருந்தோம். அந்த அமைதியான விடியற்காலைக்கும் முன் பொழுதில் வாசலில் யாரோ "டக்.டக்..டக்" என்று ஷு காலோடு நடமாடுவது போல இருந்தது. முதலில் ஒரு ஜோடிக் கால்களின் ஓசை போல இருந்தது சிறிது நேரத்தில் ஓராயிரம் கால்களின் ஓசையாக அதிகரித்தது. வெளியே சென்று பார்க்கலாம் என்று எழுந்த போது.......
விஞ்ஞானங்கள் தொடரும்..


பின் குறிப்பு: அலுவல் மிகுதியால் தொடர்ந்து தினமும் எழுத முடியவில்லை. இருந்தாலும் கடினமாக முயற்சிக்கிறேன்.

பட உதவி: questgarden.com


-

29 comments:

கக்கு - மாணிக்கம் said...

அளவுக்கு மீறிய நவீனம்............மனதில் நிற்கவில்லை / கவரவில்லை RVS. அதிலும் இது ரொம்ப ரொம்ப நீட்டம், ஸ்டார் வார்ஸ் மாதிரி வந்துகிட்டே இருக்கே!


சும்ம்மா ....நக்கல் :)

இராஜராஜேஸ்வரி said...

இரண்டு ரோபோ ஜீவிதாக்கள் தங்களது ஜடைக்குள்ளிருந்து வயரை எடுத்து பக்கத்து சுவிட்ச் போர்டில் சொருகி மின்சார சாப்பாடு சாப்பிட்டார்கள்//
அருமையான கற்பனை.
அட்சய பாத்திரம் கண்டுபிடித்த தங்களின் அற்புத திறனை வியந்து பாராட்டுகிறேன்.

பத்மநாபன் said...

ஔவை, பாரதியையும் இழுத்து கதையில் சரியாக நுழைத்துள்ளீர்கள்...பிரட் க்ளோனிங் கிளாஸ்...

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா அடுத்த பார்ட் வந்தாச்சா! நல்லது. படித்து முடித்தவுடன் மனதுக்குள் ஒயர் ஒயரா ஓடுது மைனரே....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அலுவல் மிகுதியால் தொடர்ந்து தினமும் எழுத முடியவில்லை. இருந்தாலும் கடினமாக முயற்சிக்கிறேன்.///// தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றாகத்தான் இருக்கிறது..

A.R.RAJAGOPALAN said...

என்னை போல அறிவியல் தெரியாதா அன்ஞாநிகளை, விஞ்ஞானம் பேசவைக்கும் வித்யாசமான விறுவிறுப்பான தொடர், தொடரட்டும் தொடர் அறியியல் (அறிவியல் இல்லை அறிவு இயல் அறிவியல் , இது அறியும் இயல் அதனால் அறியியல் )

இளங்கோ said...

Waiting...........

எல் கே said...

ஹ்ம்ம் அங்கங்கே வாத்தியார் சாயல் வருகிறது. தொடருங்கள்

! சிவகுமார் ! said...

//வெளியே சென்று பார்க்கலாம் என்று எழுந்தபோது....... //

பரவா இல்ல. லீவ் போட்டுட்டு எழுதுங்க.

அப்பாதுரை said...

கொஞ்ச நாள் நெட் பக்கம் வர முடியலைனா இப்படியா? போட்டுத் தள்ளியிருக்கீங்களே பாசு? எல்லாத்தையும் படிச்சுட்டு வரேன்.

எல் கே said...

என்ன போலீஸ் வந்திருச்சோ ??

சிவகுமாரன் said...

ஜெராக்ஸ் மிசின்ல பிரெட்டா ? அசத்துறீங்க. பாரதியை கூப்பிட்டு காட்டனும்கிறது இன்னும் சுவாரசியம். வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் - என பாடிய பாரதி, உங்களை தலை மேல வச்சு கூத்தாடுவான். .

சிவகுமாரன் said...

அய்யய்யோ அடுத்து அப்பாஜி எத்தனை ரோபோக்களை இறக்கப் போறாரோ தெரியலையே.
காப்பாத்துறா சாமியோவ்

தக்குடு said...

முன்னாடி எல்லாம் நடுல நடுல வாயை பொளந்துண்டு இருந்தேன் இப்ப நிரந்தரமா வாயை பொளந்துண்டேதான் உங்க ப்ளாக்கையே திறக்கறேன்...:)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
உண்மையாகக் கூட இருக்கலாம் மாணிக்கம். இயன்றவரை நன்றாக எழுத முயற்சிக்கிறேன். நன்றி. ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம். ;-))

RVS said...

@பத்மநாபன்
அவங்க உசுரோட இல்லை. சண்டைக்கு வர மாட்டாங்க அப்படீங்கற தைரியத்தில்தான்... நன்றி பத்துஜி. ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஒசரு உசுருக்குள்ள ஓடுதா? சாக்கிரதை!! நன்றி தல. ;-))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
வேலை பெண்டு நிமிருது. முயற்சி செய்து எழுதுகிறேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. ;-))

RVS said...

@A.R.RAJAGOPALAN
அறியியல்... அசத்துற கோப்லி. புது வார்த்தை கோர்க்கிறாய்.. ;-)))

RVS said...

@இளங்கோ
Coming.. ;-))

RVS said...

@எல் கே
அதுவே எனக்கு பெரும் பாக்கியம் எல்.கே. நன்றி. ;-))

RVS said...

@! சிவகுமார் !
லீவ் போட்டுட்டா! கம்பெனி ஒரு சைட் இறங்கிரும் சிவா! அப்படித்தான் என் வீட்ல சொல்றாங்க.. ;-))

RVS said...

@அப்பாதுரை
தலைவரே! இதெல்லாம் உங்க சுசுமோக்கு முன்னாடி தூசு.. ஏதோ ரீல் சுத்தறோம்.. ;-))

RVS said...

@எல் கே
போலிஸ் இல்லை. வேற ஒன்னு.. ;-))

RVS said...

@சிவகுமாரன்
பொறுமையா ஒரே நேரத்தில் எல்லா பாகத்தையும் படிச்சுட்டு பின்னூட்டமிட்ட உங்களுக்கு ஒரு நன்றி. சரடு விடறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அடிச்சுத் தள்ளறேன். நன்றி சிவகுமாரன். ;-))

RVS said...

@தக்குடு
பாராட்டுக்கு நன்றி தக்குடு. கடைசி வரைக்கும் படிக்கறவங்களுக்கு ஒரு பரிசு இருக்கு. பார்க்கலாம். ;-))

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப சூப்பரா போகுது கதை...இன்னைக்கி தான் எல்லாமும் ஒண்ணா படிச்சு முடிச்சேன்... பொறாமையா இருக்கு இப்படி எழுதறத பாத்தா... எனக்கு கூட இப்படி ஒரு கதை எழுதணும்னு ரெம்ப நாளா ஆசை... கிட்டத்தட்ட எட்டாங்கிலாஸ்ல இருந்தே, எங்க இங்கிலீஷ் டீச்சர் சொன்ன ஒரு கதையின் பாதிப்பில்... ஆனா பாருங்க மேல் மாடில அவ்ளோ சரக்கில்ல... ஹி ஹி... அதனால, உங்கள போல எழுதறவங்கள படிச்சு மனச தேதிக்க வேண்டியது தான்.... (ஒரு சிறுகதை மட்டும் இது போல எழுதி வெச்சு இருக்கேன்... அதுக்கு மேல தேத்த முடியல பாருங்க... ஹா ஹா...:)))

RVS said...

@அப்பாவி தங்கமணி
நீங்கதான் காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதிக்கிட்டு இருக்கீங்களே! பாராட்டுக்கு நன்றிங்க.. ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails