Tuesday, August 23, 2011

அன்னமில்லாமல் அண்ணா!

கடந்த ஆறு நாட்களாக அன்ன ஆகாரம் இல்லாமல் அண்ணா ஹசாரே ஊழலுக்கும், நம் நாட்டில் லாவண்யமாக நாட்டியமாடும் லஞ்சத்திற்கும் எதிராகக் கொடிபிடித்து இந்த இரண்டாவது இன்னிங்ஸ் ”சாகும் வரை உண்ணாவிரதம்” மேற்கொண்டிருப்பது ஊரறிந்த விஷயம். ஆனால் அண்ணாவுக்கு ஆதரவாக அவரை உண்ணாவிரதக் கோலத்தில் காண வரும் ஊழல் எதிர்ப்பாளர்களும், தன்னார்வ தொண்டர்களும் தீவிர உண்ணும் விரதம் மேற்கொள்கிறார்களாம்.


எதை விடுப்பது எதை எடுப்பது என்று திணறும் அளவிற்கு வண்டி வண்டியாக வீட்டில் செய்த பலவகையான பட்சணங்களும், உணவு வகையறாக்களும், உணவு விடுதிகளிலிருந்து பார்ஸல் கட்டிக் கொண்டு வருவதுமாக ராம் லீலா மைதானம் பஃபேக்களினால் நிரம்பி வழிகிறது.
பக்கோரா, கச்சோரி, இந்தியர்களின் பிரதான கொரிப்பு தின்பண்டமான சமோஸா, பரோத்தா, ரஸகுல்லா, வடக்கத்திய நம்கீன், பிஸ்கோத்து, வாழைப்பழம், டீ, மாம்பழச் சாறு என்று தடபுடலாக அறுசுவை உண்டியோடு மைதானம் அமர்க்களப்படுகிறது.

தன்னார்வலர்கள் உணவுப் பொட்டலங்களை வினியோகிக்கும் அதே வேளையில் ”வீட்டு சாப்பாடு” எடுத்து வந்த அன்பர்களும் ஆசையோடு அதை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டார்கள். தன்னார்வலர்கள் தங்களிடமிருந்த உணவுப் பதார்த்தங்களை “இன்னும் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக்கோங்க” என்று ஊட்டி விடாத குறையாக கையைப் பிடித்து வற்புறுத்தினார்கள். #ப்ளீஸ் நோட் ”பிரசாதம்”.

ஒரு கச்சோரியை கடித்துக் கொண்டே பார்வையாளர் ராஜேஷ் தவான் கூறியதாவது:
“ரெண்டாவது தடவையா நான் இந்த சிற்றுண்டியைச் சாப்பிடுகிறேன். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று கூறினாலும் கேட்காமல் கையில் திணிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் சாப்பிடுகிறேன்” என்றார் வாயெல்லாம் கச்சோரியாக.

மைதானம் பண்டிகை மற்றும் திருவிழா போன்றவைகள் நடைபெறும் இடம் போல காட்சியளிக்கிறது. ”ஐ அம் அண்ணா” என்று குல்லா அணிந்தவர்கள் மத்தியில் சிலர் தீவிரமாக மூவர்ணக் கொடியை அசைத்தவாறு இருந்தார்கள். வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு மீந்து போன சமோஸாக்களும், வாழைப்பழங்களும் குப்பைத் தொட்டிகளை நிரப்பின. கொறிக்க தீனிகளுடன் மைதானத்தின் இன்னொறு மூலையில் இளம் சிறார்கள் பட்டம் விட்டு பரவசமடைந்தார்கள்.

நாம் சந்தித்த பலர் அண்ணாவை அறிந்திருந்தாலும், “சும்மா பார்த்துட்டு போகலாம்” னு வந்ததாக கூறினார்கள். ”அண்ணாவை நான் டி.வியில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். எங்க அம்மாவும் அப்பாவும் அவரைப் பற்றி அடிக்கடி வீட்டில் பேசியிருக்கிறார்கள். அவங்க ரெண்டு பேரும் அண்ணாவைப் பார்க்க போரோம் என்றதும் நானும் என்னுடைய சகோதரனும் ”நாங்களும் வருகிறோம்” என்று அவர்களுடன் தொற்றிக்கொண்டோம். ”சரி” என்று ஒத்துக்கொண்டு கூட அவர்களுடன் அழைத்து வந்தார்கள். இப்பொழுது எங்களுக்கு நன்றாக பொழுது போகிறது” என்று தென் தில்லியிலிருந்து உண்ணாவிரதம் வேடிக்கைப் பார்க்க வந்த அங்கூர் கோபால் கூறினார்.

பத்து பாத(க)க் குறிப்புகள்(Foot notes):

  1. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் முதற் பக்க செய்தியை பெருமையுடன் தமிழ்ப்‘படுத்தியது’  உங்கள் ஆர்.வி.எஸ்.
  2.  வயிறார பசிக்கு அன்னமிடுவோருக்கு அன்னதாதா என்று பெயர்! இவர் சாப்பிடாமல் விரதமிருந்து அண்ணா தாதாவாகிவிட்டார்.
  3. அண்ணா ஹசாரேவுக்கு ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டதாம். வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்துக்கு பத்து கிலோ கூடிவிடுமோ?
  4. ஹிந்துவில் அருந்ததி ராய் அண்ணா ஹசாரேவுக்கு உதவுவது அக்கா மாலா கம்பெனியார் என்கிறார். கடவுளுக்கே வெளிச்சம்.
  5. ஊழலை எதிர்த்து அண்ணா போராடுகிறார். அண்ணாவை எதிர்த்து அரசாங்கம் மல்லுக்கு நிற்கிறது. இதன் மூலம் நாங்கள் ஊழலைக் கைவிட மாட்டோம் என்று மக்களுக்கு மத்திய சர்க்கார் பறைசாற்றுகிறது. அடடா... இதிலாவது என்னவொறு கண்ணியம்.
  6. அண்ணா ஹசாரே ராகுல் அல்லது பிரதம மந்திரி ஆபீஸிடம் மட்டும் தான் பேசுவேன் என்கிறாராம். ராகுல் தான் அடுத்தது என்று இவரே ட்ரெண்ட் செட் பண்ணுகிறாரோ!!
  7. சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது அண்ணாவுடன் சென்று அமரும் ஜடாமுடி கார்ப்போரேட் சாமியார்கள்  ஏன் முழு நேரம் வாயையும் வயிற்றையும் கட்டி உட்காரக் கூடாது?
  8. தில்லி இமாம் திருவாளர் புகாரி முஸ்லீம் சகோதரர்களை அண்ணாவை விட்டு தள்ளியிருக்க சொல்கிறார். என்ன என்று காரணம் கேட்டால் “பாரத் மாதா கீ ஜெய்” மற்றும் “வந்தே மாதரம்” என்ற கோஷங்கள் இஸ்லாத்திற்கு எதிரானது என்கிறார். தாய் மண்ணையும், தாயையும் கூட வணங்குவதை இஸ்லாம் ஏற்பதில்லை என்கிறார்.
  9. தலை நகர் தில்லியில் அண்ணா சாப்பிடாமல் உட்கார்ந்ததிலிருந்து டிராஃபிக் விதிமீறல்கள் நிறைய நடக்கிறதாம். காந்தி படம் போட்ட குல்லாயுடனும், தேசியக் கொடியை ஒரு கையிலும் ஏந்தி ஒரே வண்டியில் மூவர் பயணிப்பது போன்றவைகள் சகஜமாக நடக்கிறதாம். கேட்டால் பிரச்சனை என்று போக்குவரத்து போலீசார் வேடிக்கை பார்க்கிறார்களாம். #சென்னையில் அடக்க ஒடுக்கமாக எல்லோரும் அனைத்து சமயங்களிலும் வாகன ஊர்தி ஓட்டுவது அனைவரும் அறிந்ததே!!
  10. அன்னை சோனியா காந்தி தக்க சமயத்தில் உள்ளூரில் இல்லாதது இந்த அண்ணா விவகாரத்தில் தங்களுக்கு பெரிய பின்னடைவு என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஹையோ...ஹையோ...
இந்தக் கட்டுரை அதீதத்தில் வெளியாகியுள்ளது.

பட உதவி: http://www.crickblog.com/

-

19 comments:

வெங்கட் நாகராஜ் said...

:)

அப்பாதுரை said...

அவரைச் சுற்றி உண்ணும் விரதம் போல இருக்கிறதே?

அப்பாதுரை said...

இது போன்ற 'சத்தியாகிரக' முறைகள் இன்றைய நிலையில் பயனுள்ளவையா?

கோவை2தில்லி said...

இங்கு அன்னா ஹாசாரேவுக்காக அவ்வப்போது கூட்டம் கூட்டமாக கோஷமிட்டுக் கொண்டு செல்கிறார்கள்.ட்ராபிக்கிலும் பிரச்சனை தான்.

வீட்டுக்கு பின்புறம் தான் பிர்லா மந்திர் என்பதால் ஜன்மாஷ்டமி ஊர்வலங்களும் நடந்து கொண்டிருந்தன. ஒரே ஜே ஜே தான்.

பத்மநாபன் said...

வேறேன்னதான் வழியிருக்கிறது.. அன்னா ஹாசாரே முன் வந்துள்ளார் இந்த மன உறுதியை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது... நீர்த்து போகவும் விடக்கூடாது....அங்கு போய் உண்ணும் விரதம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்... போய் பார்த்து வருபவர்களுக்கு ஒரு மணி நேரம் கூட அடையாள உண்ணாவிரதம் இருக்க முடியாதா என்ன?

siva said...

:) NO COMMENTS.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அவரைச் சுற்றி உண்ணும விரதம் என்பது சற்றும் நாகரீகமில்லாதது.

RAMVI said...

உண்ணா விரதம்தான் இருக்க முடியவில்லை. அவர் இருக்கும் இடத்திலாவது மற்றவர்கள் உண்ணாமல் இருக்கலாம் அல்லவா?

ரிஷபன் said...

நம் வழக்கமே யாராச்சும் ஒருத்தர் கிடைச்சா சுற்றி வந்து கும்மி அடிப்பதுதான்..
இப்போது அன்னா ஹசாரே!

Ramani said...

எதையும் சுற்றுலாத் தளம்போல் ஆக்கிவிடும்
நம் மக்களின் மனோபாவம் என்றுதான் மாறுமோ?

RVS said...

@வெங்கட் நாகராஜ்

:-))) என்ன தல பேசமாட்டேங்கிறீங்க... :-))

RVS said...

@அப்பாதுரை
தலைவரே!

ஐயா பசி என்று இராப்பிச்சை யாராவது கேட்டால் எங்களுடைய சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து அவனுக்கு போட்டுவிடுவார்கள்.

இப்போது இராப்பிச்சையாட்களையே காணோம்.

சத்யாகிரகம்.... உம்..ம்.... சந்தேகம் தான்.. :-)

RVS said...

@கோவை2தில்லி

கருத்துக்கு நன்றி சகோ! :-)

RVS said...

@பத்மநாபன்
நியாயமான கேள்விகள் தல.. :-)

RVS said...

@siva

ஏனப்பா? :-))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)

ஆமாம் மேடம். ரொம்ப கொடுமை.. நம்ப மக்களுக்கு எல்லாமே வேடிக்கை தான்.. :-)

RVS said...

@RAMVI
அவங்களே சப்ளை பண்றாங்களாம் மேடம். எப்டி சாப்டாம இருப்பாங்க.. :-)

RVS said...

@ரிஷபன்

இந்த முறை இது நேஷனல் கும்மி சார்! :-))

RVS said...

@Ramani

ரொம்ப சரியாச் சொன்னீங்க ரமணி சார்! கருத்துக்கு நன்றி! :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails