Tuesday, December 6, 2011

தக்காளிக்காரன்

 
ஒரு பொண்டாட்டி, மூன்று குழந்தைகள் கொண்ட குடும்ப பாரத்தை சிரமத்தோடு இழுக்கும் குடும்ப இஸ்திரி ஒருவர் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திற்கு குப்பை பெருக்கி துடைத்து மொழுகும் வேலைக்கு விண்ணப்பித்தார். இண்டெர்வியூ முடிந்து அவரது பணி நிர்மான கடிதத்தை அனுப்ப “ஸார்! உங்களுடைய ஈ மெயில் ஐ டி ப்ளீஸ்” என்றாள் அந்த லிப்ஸ்டிக் வாயழகி. ”எங்கிட்ட ஈமெயில் ஐடி இல்லீங்க” என்று தலையைச் சொறிந்தார் அவர். “ஸாரிங்க.. எங்க கிட்ட வேலைக்கு வரணும்னா ஈமயில் ஐ.டி இருக்கனும்”ன்னு சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்.

10 டாலரை பையில் வைத்திருந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தெருவில் திரிந்த போது செக்கச் செவேலென கண்ணைப் பறித்த தக்காளிகள் ஒரு க்ரேட் வாங்கினார். அவரது ஏரியாவிற்கு சென்று அருகிலிருக்கும் கடைதெருவில் 20 டாலருக்கு விற்று 100 சதம் லாபம் சம்பாதித்தார்.

இதுபோல க்ரேட் க்ரேட்டாக நிறைய வாங்குவதற்கு லாரி தேவைப்பட்டது. ஒன்று வாங்கினார், அப்புறம் க்ரேட் கணக்குகள் பெருக இரண்டு மூன்று என்று புது லாரிகள் வாங்கினார். அவரது மூன்று பசங்களும் தங்களது ஆதரவை அள்ளித் தர தக்காளி பிஸினெஸ் பெரியதாக வளர்ந்தது. அந்த ஊருக்கே அவர் பெரிய தக்காளிக்காரனாக உயர்ந்தார்.

பெரிய பிஸினெஸ் மேக்னெட்டாக உயர்ந்த பிறகு தனது குடும்பத்திற்கும் வியாபரத்திற்கும் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினார். அந்த டை கட்டிய எக்ஸிகியூடிவ் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு ”உங்க ஈ மெயில் ஐடி ப்ளீஸ்” என்றான். வாய் நிறைய புன்னகையோடு ”இல்லை” என்று அர்த்தபுஷ்டியாக சிரித்தார் அவர்.

”அச்சச்சோ! ஈமெயில், கம்ப்யூட்டர் இதெல்லாம் இல்லாமலேயே உங்க பிஸினெஸ்ல இவ்ளோ லாபம் வந்திருக்கே. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே உங்களுக்கு ஈமெயில் ஐடி இருந்தா இந்நேரம் என்னவா ஆயிருப்பீங்க” என்று வருத்தமாக விசாரித்தானாம் அவன்.

அதற்கு அவர் பல்லைக் காட்டிக்கொண்டே சொன்ன பதில்....

“மைக்ரோஸாஃப்ட்ல ரூம் ரூமா துடைச்சு பெருக்கிக்கிட்டுருப்பேன்யா”
பின் குறிப்பு: மற்றுமொரு டிட் பிட் பதிவு.
பட உதவி: http://www.insidehobokenrealestate.com/
-

24 comments:

விக்கியுலகம் said...

அட நல்லா இருக்குங்க!

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கு மைனரே.. படம் first class selection!

கோவை2தில்லி said...

டிட்பிட் சூப்பர்....
படம் ரொம்ப நல்லா இருக்கு.
தொடரட்டும் டிட்பிட்கள்....

RAMVI said...

டிட்பிட் ரொம்ப நன்றாக இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

படமும் பகிர்வும் ரசிக்கவைத்தன.

பாராட்டுக்கள்..

ரிஷபன் said...

இதே போல முன்னால ஒரு கதை.. கையெழுத்து போடத் தெரிஞ்சிருந்தா கோவில்ல மணி அடிச்சுகிட்டு இருந்திருப்பேன்னு..

A.R.ராஜகோபாலன் said...

அருமையான பகிர்வு நண்பா

rishvan said...

nalla suya munnetraa kathai.... sirippudan... www.rishvan.com

கணேஷ் said...

அடடே... கையெழுத்து மட்டும் போடத் தெரிஞ்சிருந்தா இப்பவும் சர்ச்சுல மணி அடிச்சுட்டு இருந்திருப்பேன்-னு நான் ஒரு கதை படிச்சிருக்கேன். இன்றைய காலச் சூழலுக்கு ஏத்த மாதிரி இப்படிக் கூட பிரசன்ட் பண்ண முடியுமா? பிரமாதம் சார்... மிக ரசிச்சேன்!

Ramani said...

சுருக்கமான பிரமாதமான கதை
பதிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

பெசொவி said...

//ஒரு பொண்டாட்டி, மூன்று குழந்தைகள் கொண்ட குடும்ப பாரத்தை சிரமத்தோடு இழுக்கும் குடும்ப இஸ்திரி ஒருவர்//

It should be husband not wife

RVS said...

@விக்கியுலகம்
நன்றிங்க.. ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க.. :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
@கோவை2தில்லி

தம்பதி சமேதராய் வந்து பாராட்டி கமெண்ட்டியதற்கு நன்றி. :-)

RVS said...

@RAMVI
ரொம்ப நன்றி மேடம்! :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம். :-)

RVS said...

@ரிஷபன்
ஆமாம்.இந்தியன் வர்ஷன். :-)

RVS said...

@A.R.ராஜகோபாலன்
நன்றி கோப்லி! :-)

RVS said...

@rishvan
நன்றிங்க.. :-)

RVS said...

@கணேஷ்
ரசித்ததற்கு மிக்க நன்றி சார்! :-)

RVS said...

@Ramani
நன்றி சார்! :-)

RVS said...

@பெசொவி

குடும்ப ஸ்திரீயைச் சொல்லவில்லைண்ணா! பாரம் இழுக்கும் கணவனை கிண்டலாகச் சொன்னது. சரிங்களா?

கமெண்டிற்கு நன்றி. :-)

ஜிஜி said...

உங்க டிட்பிட்டுகள் எல்லாம் படிக்க சுவாரஸ்யமாக இருக்குங்க.

சிவகுமாரன் said...

புது மொந்தை.. பழைய கள்ளு. ஆனாலும் போதை அதிகம் சாரே.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உண்மையைச் சொல்லுங்க..சாமர்செட் மாம் கதையிலே கடுகு..தக்காளி..இஞ்சி..எலுமிச்சம்பழம்போட்டு நல்லாவே தாளிச்சிருக்கீங்க..சூப்பர்..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails