Wednesday, July 24, 2013

ஆணழகன்

அனவரதமும் தோழர்களாக என்னைப் பாவித்து நன்றி பாராட்டி வரும் தெருவோரத்துப் பைரவர்கள் சில நாட்களாக “கர்..கர்...”ரென்று கர்ஜிக்க ஆரம்பித்திருந்தார்கள். ஒரு சிலர் அருகில் வந்து முறைக்கவும் செய்தார்கள். ஏனென்று விவரம் புரியாமல் குழம்பியிருந்த போன வாரத்தில் ஒருநாள் கல் இடறியதில் காலைக் குனிந்து பார்த்த போதுதான் புத்திக்கு உரைத்தது. இருவேறு காலணிகளிலிருந்து ஜோடி பிரிக்கப்பட்டவை ஒன்றாய்ச் சேர்ந்து குப்பைத் தொட்டியில் கிடக்குமே, அது போல என்னுடைய ஷூ பல்லிளித்தது. நேற்று வாங்கிய புது பாட்டாவில் ராஜபாட்டையாக போனபோது வீதி பைரவர்கள் சிநேகபாவத்துடன் இன்று நெருங்கி வந்து வாலாட்டின. கண்களில் காருண்யம் தெரிந்தது. சிறிது தூரத்தில் மேற்சட்டையில்லாமல் இரு நெஞ்சும் கற்பாறையாகவும் தோள்பட்டையிலிருந்து கைகளுக்கு ஓடும் நரம்பெல்லாம் புடைத்து ஈபி ஒயர் போல முறுக்கேறியும் ஈவிரக்கம் இல்லாத கண்களுடன் மொட்டையடித்த WWF ஆள் படம் போட்டு போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். விழி லென்ஸை சற்று ஃபோகஸ் செய்து பார்த்ததில் ஏதோ மாநில அளவில் ஆணழகன் போட்டியாம். மனஸு மென்மையாகவும் பிறத்தியாருக்குத் தீங்கு விளைவிக்காதவனாகவும் இன்சொல் பேசுபவனாகவும் பெண்களிடம் வீரத்தைக் காண்பிக்காதவனாகவும் இருப்பவன் தானே ஆணழகனாக இருக்க முடியும். இரும்பாக உறுதிகாட்டும் உடம்பைப் பேணுபவர்களுக்கு உடலழகன் போட்டிதான் வைக்கவேண்டும் என்று மனசுக்குள் ஒரு ஆர்.வி.எஸ் பேசிக்கொண்டே கூட நடந்து வந்தான். 

#வாக்கிங் காட்சிகள்!

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுருக்கமாக மனதில் உறுதியாக...!

Cherub Crafts said...

வாக்கிங் காட்சிகள் அருமை ..நம்மூர் பரவர்கள் எங்கிருந்து எப்ப வருவாங்கன்னே சொல்லமுடியாது :)


Angelin

மாதேவி said...

பைரவர்கள் தோழர்களாகிவிட்டார்கள்.

Cherub Crafts said...

பைரவர்கள் //ஸ்பெல்லிங் mistake .sorry .
Angelin

Madhavan Srinivasagopalan said...

// இரும்பாக உறுதிகாட்டும் உடம்பைப் பேணுபவர்களுக்கு உடலழகன் போட்டிதான் வைக்கவேண்டும் என்று மனசுக்குள் ஒரு ஆர்.வி.எஸ் பேசிக்கொண்டே கூட நடந்து வந்தான்.
//

ஓஹோ.. நீங்கதான் 'டாடி எனக்கு ஒரு டவுட்டு'' ஸ்க்ரிப்ட் ரைட்டரா ?

Manickam sattanathan said...

ஹாய் மைனர், நான் வந்துட்டேன்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails