Wednesday, July 24, 2013

நளபாகம்

என்னுடைய நண்பர்களில் பலர் நளபாகர்கள். கரண்டி பிடிக்கும் கரங்கள். சமீபத்தில் பூர்த்தியடைந்த காரடையான் நோம்பிற்கு வெல்லடை உப்படை தட்டுவதில் ஆம்படையாளுக்கு ஒத்தாசையாக இருந்து அதன் மூலமாக நமஸ்காரம் வாங்கிக்கொண்ட புண்ணியவான்களும் இதில் உலர். கிச்சனை எட்டிப் பார்க்காத ஒரேயாள் நானாகத்தான் இருப்பேன். என்னுடைய ஆத்ம நண்பரிடம் பலமுறை ஆவலாய் சமையல் கலையை அடியேனுக்கு அப்யசிக்க விண்ணப்பித்ததுண்டு. இன்னமும் அடுப்படியை அதகளமாக்கும் நேரம் வாய்க்கவில்லை. தினந்தோரும் அந்த வீட்டு வாசற்படி கடக்கையில் வயிற்றை வம்புக்கிழுப்பது போல கும்மென்று பிரமாதமாக வாசனையடிக்கும். என்றைக்காவது ஒருநாள் அவ்வீட்டு வாசலில் அம்மா தாயேன்னு கையேந்திவிடுமளவிற்கு கொக்கிப்போட்டும் கமகம சாப்பாட்டு வாசனை. இன்றைக்கு வாசனை நாலு வீட்டுக்கு முன்னாலேயே ஆரம்பித்திருந்தது. அந்த இல்லத்தில் ”COOKING CLASS" என்று க்ரில் கேட்டில் ரெண்டுக்கு ரெண்டில் சின்ன போர்டு தொங்கியது. "Learn and be merry" என்று நாக்கு நாலு முழம் வளர்ந்த ஆசாமிகளை திருப்திப்படுத்த உத்தரவாதமளிப்பது போன்ற அடிவாசகம். அதற்கடியில் போட்டிருந்த (Ladies Only) என்கிற ப்ராக்கெட் வார்த்தை என்னை அப்பளமாய் நொறுக்கிவிட்டது. சமைக்கத் தெரியாத மகளிரின் கண்ணீர் துடைக்க வந்த கம்பெனி போலும்.

#வாக்கிங் காட்சிகள்!

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கம்பெனி தப்பித்தது...? ஹிஹி...

சே. குமார் said...

நல்லவேளை அண்ணா...
கம்பெனி தப்பியது...
ஹா... ஹா....
இப்பவே எத்தனை பெண்களிடம் மாட்டிக்கிடக்கிறதோ...

அமைதிச்சாரல் said...

//கிச்சனை எட்டிப் பார்க்காத ஒரேயாள் நானாகத்தான் இருப்பேன்.//

அண்ணிக்கு அடுக்களை சுத்தம் செய்யற வேலை மிச்சம் :-)))))))

Madhavan Srinivasagopalan said...

"// அதற்கடியில் போட்டிருந்த (Ladies Only) என்கிற ப்ராக்கெட்// வார்த்தைகள் என்னை, 'அவ்வைஷண்முகி' ஆக்கிவிடும் போலிருந்தது.. "

இப்படிலாம் எழுது ஆளாச்சே நீங்க.....
இதுக்குத்தான் அடிக்கடி(blog ) எழுதணும் போல..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails