Monday, August 12, 2013

பூ...பூ...பூ...

ஆகாயத்திலிருந்து ஷவரைப் பொழிவதற்கு ஆயத்தமாக கார்மேகங்கள் மெகா சைஸ் பூவாளிகளாகச் சூழ்ந்து நின்றன. கையில் குடையில்லாமல் தெருவில் இறங்கி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தேன். அந்த வீட்டைத் தாண்டும் போது பூத்துக்குலுங்கிய பவழமல்லியின் வாசனை மூக்கைத் துளைத்தது. இவ்வாசனை மன்னையில் எங்கள் வீட்டின் வாசலில் வைத்திருந்த சம்பங்கிச் செடியின் சுகந்தத்தை கட்டி இழுத்து வந்தது. அங்கே கொல்லையில் வைத்திருந்த செம்பருத்தியை மாலையாகவும் உதிரியாகவும் விஸ்வநாதர் கோயில் பிள்ளையாரின் தும்பிக்கையில் சேர்த்தது இங்கே சித்தி விநாயகர் கோயிலைக் கடக்கும் போது ஞாபகம் வந்தது.

இந்த நொடியிலிருந்து கண் வீடுவீடாக மலரைத் தேட ஆரம்பித்தது. மலர்=பூ என்றறிக. பூஜைக்கு நந்தியாவட்டை பறித்துக்கொண்டிருந்த கண்ணாடியணிந்த ஒரு ட்ரேட் மார்க் அப்பாவைப் பார்த்ததும் “பூக்களைத் தான் பறிக்காதீங்க.. காதலத் தான் முறிக்காதீங்க” என்று கன்னங்களை மறைக்கும் தாடி சகிதம் டி.ஆர் கையைக் காலை உதறிக்கொண்டு இசையமைப்பது தேவையில்லாமல் சிந்தனையில் வந்து கொட்டமடித்தது. அச்சச்சோ. காதலைப் பற்றி பேசும் சுகாதாரமான சூழல் தமிழ்நாட்டில் இப்போது இல்லையே என்று நினைத்துக்கொண்டேன். டிஆரால் வந்த சிரிப்பை அழுத்திக்கொண்டேன். மழைக்கு முன் வீட்டை அடைய நீளம் தாண்டுதல் போல விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தேன். கடவுளுக்கோ காதலிக்கோ ஏற்றார்போல நம் மூடை மாற்றும் வல்லமை படைத்த வாச மல்லிகை நிரம்பிய பூக்கூடை தெய்வங்களை நினைவுபடுத்தாமல் “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ”வைக் கிளப்பி ரொமாண்டிக் காலையாக மாற்றிப்போட்டது.

இப்போது மிதமான காற்றுடன் வானம் லேசாக பன்னீர் தூவ ஆரம்பித்தது. அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சளென கொழக்கட்டை மந்தாரை மலர்கள் தான் பூத்திருந்த செடியின் பச்சை இலைகளைகளின் எண்ணிக்கையைத் தோற்கடிக்கும் விதத்தில் அந்த பங்களாவின் வாசலில் குலுங்கிக்கொண்டிருந்தது. கூன் விழுந்த அந்த மூதாட்டி எக்கியெக்கி அந்த புஷ்பத்தைப் பறிக்க எத்தனித்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் நெருங்கி கிளையைத் தழைத்துத் தரலாம் என்று காலுக்கு ஆக்ஸிலேட்டர் கொடுத்து வேகத்தைக் கூட்டினேன். வாசலில் தலையை நீட்டி முண்டா பனியன் அணிந்த ஒரு பெரியவர் அந்தப் பாட்டியை விரட்டினார். இரண்டு விரலை நீட்டி அந்தப் பாட்டி கெஞ்சும் தோரணையில் பூ கேட்பது புரிந்தது. மீண்டும் விரட்டப்பட கோபமேயில்லாமல் பூப்போல சிரித்துக்கொண்டே என்னைக் கடந்து அந்தப் பாட்டி எதிர்திசையில் நடந்து போனார்.

காதல் வழிய வழிய உன்னி கிருஷ்ணன் காதுகளில் பாடிக்கொண்டிருந்த “வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி” துக்க உருண்டையாக மாறி தொண்டையை அடைத்தது. இரண்டு பூ மறுக்கப்பட்ட அந்த பாட்டிக்காக “இது சொர்க்கமா? இல்லை நரகமா?” மட்டும் உச்ச ஸ்தாயியில் கேட்டது.

மழைக்காக பசு ஒதுங்கியிருந்த கடை வாசலில் நானும் சிறிது நேரம் நின்றேன். கல்லூரி பஸ்ஸிற்காக காத்திருந்த பெண்ணின் தலையில் ஒற்றை ரோஜா எட்டிப்பார்த்தது. நடந்தால் ஐஃபோன் நனையாது என்று மழை குறைந்த பிறகு மீண்டும் நடையைத் தொடர்ந்து வீடு வந்து சேர்ந்தேன். வாசலில் மழையில் குளித்த புத்துணர்வுடன் அரளிப் பூ சிரித்துக்கொண்டே ”வா.. என்னைப் பறித்துக்கொள்” என்றது.

அந்தப் பாட்டி நம் தெருவுக்கும் வருவாளா? என்று அனிச்சையாய் என் தலை தெருமுக்கை திரும்பிப் பார்த்தது.

#வாக்கிங் காட்சிகள்

18 comments:

இராஜராஜேஸ்வரி said...

வாக்கிங் காட்சிகள் பூவாய் மலர்ந்தன.. மணக்கிறது..!

Ramani S said...

இறுதியில் ஒற்றை வரி
என மனதிலும் பூ வாசத்தை
பரப்பிவிட்டுப் போனது
மனம் கவர்ந்த பகிர்வு
தொடர வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 2

வை.கோபாலகிருஷ்ணன் said...

பூப்போன்ற மிகவும் மிருதுவான அழகான வாசம் மிக்க வர்ணனைகள்.;)

கடைசியில் பூ...பூ...பூ இவ்வளவு தானா என ஓர் ஏக்கமும் ஏற்பட்டதை என்னால் ஏனோ சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

பூ வாசம் புறப்படும் முன்னே....

வாக்கிங் காட்சிகள்... ரசித்தேன்.

அப்பாதுரை said...

touching.

அப்பாதுரை said...

touching.

சே. குமார் said...

வாக்கிங் காட்சிகள் அரும்பாய் மலர்ந்து அழாகாய் பூத்து பாட்டியைத் தேடிய போது மலர்ந்து மணத்தது.

sury Siva said...

It is not touching as + A Durai Appadurai Sir remarks.

It's actually itching somewhere in one's heart.

subbu thatha.
www.Sury-healthiswealth.blogspot.com
www.subbuthatha72.blogspot.com

மாதேவி said...

பூக்கள் பறிக்கும் காட்சி விரிந்து
மணம் நிறைந்து வீசுகின்றது.

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம். :-)

RVS said...

@Ramani S said...
மிக்க நன்றி ரமணி சார்! பதிவர் சந்திப்பில் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி!! :-)

RVS said...

@வை.கோபாலகிருஷ்ணன்
கருத்துக்கு நன்றி சார்! :-)

RVS said...


@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே!! :-)

RVS said...

@அப்பாதுரை
நன்றி அப்பாதுரை சார்! :-)

RVS said...

@சே. குமார்
மிக்க நன்றி பரிவை சே. குமார்!! :-)

RVS said...

@sury Siva
ஆமாம் சார். பார்க்கும் போது இச்சிங்காகத்தான் இருந்தது. மனதையும் தச்சிங். கருத்துக்கு நன்றி :-)

RVS said...

@மாதேவி
தொடர் வருகைக்கும் கருத்துக்கு நன்றிங்க.. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails