Saturday, May 9, 2015

ஆனந்த யாழை மீட்டுகிறாய்...

இன்று சின்னவளுடன் வாக்கிங். வழிநெடுக லொடலொடன்னு ஸ்வீட்டாகப் பேசிக்கொண்டே வந்தாள். மிதிபடும் மானுட வாழ்க்கையில் இதுவல்லவோ மட்டற்ற சந்தோஷம். 

”ப்பா.. அவன் ரொம்ப மோசம்ப்பா... பேட் வேர்ட்ல கெட்ட வார்த்தை பேசறான்...”

“ ஃப்ரிட்ஜ்ல ஃப்ரீஸர்ல வச்சுட்டு திருப்பதி லட்டு கொடுத்துட்டே.. மிஸ்ஸால ஒடைக்கவே முடியலை... பாவம்...குத்திக் குத்தி எடுத்தாங்க...”

”அந்த பப்பி பக்கத்துல போகாதே... அதோட அப்பா அம்மா அதோ அங்க தரையை மோந்துண்டு நிக்கறா பாரு.... ஒடி வந்து வள்ளுன்னு உன்னைக் கடிச்சுடுவா...”

“யாரோ குப்பையை ஒழுங்காவே தொட்டில போடலை.. அந்தப் பாட்டியால பெருக்கவே முடிலை.. அது மட்டையை போட்ருச்சுன்னா அந்தப் பாவம் அவங்களை சும்மாவே விடாது.. ஸ்வாச் பாரத்ன்னு மோடி சொல்லியே இவங்கள்லாம் கேட்கலை... ”

“அம்மா உணவகத்துல சாப்டறத்துக்காக ரெண்டு பேர் உட்கார்ந்திருக்கா.. பாவம் அவாளுக்குப் பல் தேய்ச்சவுடனேயே பசிக்கறது போல்ருக்கு...”

“அப்பா.. காலிஃப்ளவருக்கு காலிபுலவர்னு எழுதியிருக்காங்க பாரு... அதுவும் காலிபுலவர் பகோடாவாம்... புலவரை பகோடா போட்டுட்டாங்க... ஹா..ஹா..“

“ஐயப்பனை ஷூவோட கன்னத்துல போட்டுக்காதே.. அவுத்து வச்சுட்டுதான் கும்பிடணும்..ஸ்கூல்ல பிள்ளையார் கோயிலுக்குப் போம்போது அப்படிதான் சாக்ஸோட போவோம்..”

குட்டிச் செல்லத்திடமிருந்து இப்படி ஒரு பேச்சு இருந்தால் இன்னும் நானூறு கிலோ மீட்டர் கூட தாராளமாக நடக்கலாம். ரொம்ப சுகம். கால்களுக்கு க்ரீஸ் போட்டுவிட்டது மாதிரியான அவளது பேச்சு.

ஏரிக்கரையோரம் நடக்கையில் “ப்பா... தண்ணில சூரியனோட ரிஃப்ளெக்‌ஷன் தெரியற மாதிரி எடுப்பா..” என்று ஆங்கிள் அவள் சொல்ல எடுத்த க்ளிக்.

‪#‎ஆனந்த_யாழை_மீட்டுகிறாய்‬.........

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails