Sunday, October 22, 2017

சுப்பு மீனு: குந்தி ஸ்தவம்

"சுப்பு.. ஏன்டா ரொம்ப டல்லா இருக்கே?"
"மனசு சரியில்லே மீனு.. "
"கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி ஒரே பாட்டு உன் ரூம்ல ஓடிக்கிட்டே இருந்துச்சே... மனசு சரியில்லேன்னு சொல்றியே..."
"மனசு நெசம்மாவே சரியில்லேடி தங்கம்... "
"சந்தோஷத்தின் ஊற்றுடா நீ சுப்பு..."
"இருந்தாலும் மனசைப் பிசையறது செல்லம்மா.."
"சோகத்துல நனைஞ்சுட்டா தங்கம்... செல்லம்னு குழையறையேடா சுப்பு... அது என்ன பாட்டுன்னு சொல்லலியே..."
"உனக்கும் பிடிச்ச பாட்டுதான்டி பட்டு..."
"சோகத்துலயும் உனக்கு ரொமான்ஸ் கேக்குது.... ம்.... சரி பாட்ட படி..."
"பாட்டுக்கும் முன்னாடி... ஒரு மஹாபாரத சம்பவம் சொல்லட்டா?”
“வெரிகுட்... இப்படி எதாவது தர்மத்தை போதிக்கும் புத்தகத்தைப் படிச்சுட்டா... சோகமெல்லாம் பஞ்சாய்ப் பறந்திடுமே... ரைட்டா?”
“புத்தகம்னு அல்பமா சொல்லிட்டியே.. அது வேதமில்லையா?”
“சரிடா.. உங்கிட்டே மாட்டிக்கிட்டேன்.. வறுத்துடுவியே... அந்த மஹாபாரத சம்பவம் சொல்லேன்...”
“குந்தி ஸ்தவம்ன்னு ஒரு விசித்ரமான ஸ்தோத்திரம்.. மஹாபாரதத்துல வருது... அதுல என்ன விசேஷம் தெரியுமா?”
“உம்மாச்சி... காப்பாத்து விவகாரம்தானே... இதுல என்ன இருக்கு?”
“இல்ல மீனு... அதுல வித்யாசமா குந்தி எனக்கு கஷ்டத்தைக் கொடுடா கிருஷ்ணான்னு வேண்டறா...”
“ஏன்? மத்தவாளோட கஷ்டத்தை குடுன்னு கேட்கிற vicarious suffering வகையறாவா இது?”
“இல்லையில்லே.... நெஜமாவே கஷ்டத்தைக் குடுங்கிறா...சோகத்தை அள்ளி எம்மேலே பூசுடா... என்னைத் திணற அடி... அப்ப அலறுவேன்... நீ ஓடி வருவே... எனக்கு அதுதான் வேணும்ங்கிறா... ஏன் தெரியுமா? ஒவ்வொரு தடவை கஷ்டம் வரும் போதும் கிருஷ்ணன் அங்க வந்து குதிச்சுடறானாம்..ஹெல்ப் பண்றத்துக்கு... அதனால எப்போதும் எங்களுக்கு கஷ்டம் கொடுன்னாளாம்..”
“ஆமாயில்லே... திரௌபதி வஸ்திராபரணம் போது வந்தான்... சூதாடி தோத்துட்டு காட்டுல சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் போது அட்சயப் பாத்திரம் கொடுத்தான்... அவாளுக்காக நாடு வாங்கிக்கொடுக்க தூது போனான்... அப்புறம் பாண்டவா பக்கம் ஜெயம் வறதுக்கு சாரதியாய் வண்டிலயே கிடந்தான்... அர்ஜுனனோட பிள்ளை அபிமன்யுவுக்கு உத்தரைக்கும் சிசுவாக வயிற்றில் இருந்த பரீக்ஷித்தை அஸ்வத்தாமனின் அஸ்திரத்திலிருந்து காப்பாற்றினான்.... கடைசியாக திருதிராஷ்டிரனிடம் ஆசி வாங்கச் சென்ற பீமனை நகர்த்தி ஒரு உலோக பொம்மையை அவன் முன் நிறுத்தி... அந்த பொம்மையை அவன் நொறுக்க... பீமனைக் காப்பாற்றினான்... இப்படி பக்தாளான பாண்டவாளுகாக உழைச்சுக் கொட்டியிருக்கான்... ...”
”பார்த்தியா.. கஷ்டம் வர வர அவா முன்னாடி போய் நின்னானாம் கிருஷ்ணன். பாண்டவாளுக்கு உதவி பண்றதுல அவனுக்கு அவ்ளோ திருப்தி... அதான் நானும் கேட்கப்போறேன்.. எனக்கும் இன்னுமின்னும் கஷ்டத்தைக் கொடுடா.. என்னை உன் சரணத்தை விட்டு அகலாதப் பண்ணு....”
“சரிடா... ரொம்ப ஃபீல் ஆகாதே... அதென்ன பாட்டுடா.. இப்பவாச்சும் சொல்லேன்...”
“பாட்டாவே படிச்சுடட்டா?”
“அர்த்தராத்திரிலே அந்தக் கொடுமை வேறயா? ம்... ஆரம்பி...”
”நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் 
நிறைந்த சுடர்மணிப்பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள் 
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர் சக்தி 
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில் லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு 
ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி, நினக்கொரு 
விண்ணப்பஞ் செய்திடுவேன்,
எள்ளத் தனைப்பொழுதும்பயனின்றி 
இரா தென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி 
வேல்சக்தி வேல்சக்தி வேல்சக்தி வேல்.”

“நடுப்பற பாதி வரியை முழுங்கிட்டே சுப்பு.. சுமாரா பாடறே.. எம்மெஸ் அம்மா பாடிக் கேட்கணும் இதை... சரி விடு.. இனிமே சோகமெல்லாம் இறங்கிடும்.. Be Cool"
"மீனு.. உன் தோள்ல கொஞ்சம் ஆதரவாச் சாஞ்சுக்கட்டுமா? ப்ளீஸ்..”
“ச்சீ... வாடா கண்ணா.. இதென்ன கேள்வி... சோகம் இனி இல்லை.. அட.. வானமே எல்லை...”
“தாங்ஸ்டீ... பேசும் பொற்சித்திரமே.....”
“சரி...சரி..சரி...”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails