Monday, October 23, 2017

சுப்பு மீனு: காஷ்ட மௌனம்

"என்னடா சுப்பு.. இப்பல்லாம் ரொம்ப ஸைலன்ட்டா ஆயிட்டே..."
"அனாவசியமா வாயைத் தொறக்க வாண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.. இல்லேன்னா உங்கூட மல்லுக்கு நிக்க வேண்டிருக்கு.. பேச்சுல துவந்த யுத்தம் என்னால முடியல.... மௌனம் சம்மதம்... ஓகேவா? டீல்..."
"அடடா.. நீ உம்மனா மூஞ்சியாயிட்டா நான் எங்க போவேன்.... மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்.. அட்டகாசம்ல... எஸ்பிபி கலக்கியிருப்பார்.."
"பேசக்கூடாதுன்னு பார்த்தா ரொம்ப நோண்டுவே... வாண்டாம்.. நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்.. போதும் போ... "
"பேசாம இருந்துட்டா போதுமா? எங்கிட்டேயிருந்து தப்பிச்சுடுவியா?"
"கரெக்டுதான்... இன்னும் கொஞ்சம் சுதி கூட்டி.. ரிஷிகள்.. முனிவர்கள்...சித்தர்கள் மாதிரி காஷ்ட மௌனம் இருக்கலாம்னு பார்க்கிறேன்..."
"அதென்னடா காஷ்ட மௌனம்... இப்பதான் ரொம்ப பேசறே"
"காஷ்ட மௌனம்னா.. கட்டையைப் போல கெடக்கிறது... கட்டை பேசுமா? ஜாடை காமிக்குமா? மனசுக்குள்ள கனவு காணுமா? ஒண்ணுமில்லையோன்னோ... அதுமாதிரி இருக்கறது... நான் ஃபாலோ பண்ணப்போறேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே..."
"நீ பேசலைன்னா தலையை வெட்டிச் சாச்சுடுவாங்க... பரவாயில்லையா?"
"யே மீனு ரொம்ப மிரட்டாதே... விரதங்களில் சிறந்த விரதம் மௌன விரதம்.. இனிமே பாரேன்.. வாய் பேசாம.. ஆன்ம பலத்தை கூட்டப்போறேன்..."
"ச்சீ..ச்சீ... பேசலைன்னா உனக்கு அழகே இல்லைடா.. நீ பேசலைன்னா உன்னை ஏறி மேஞ்சுடுவாங்க.. பின்னால ரொம்பவே வருத்தப்படுவே சொல்லிட்டேன்..."
"ஊஹும்.. நோ வே... ஏகாதசி.. கிருத்திகை..சிவராத்ரி.. இப்படி உபவாச நாட்கள்ல மௌனவிரதமும் சேர்ந்து இருக்கலாம்.. அதாவது பட்டினியும் மௌனமும்.. வாய்க்கு ரெண்டு வேலையுமே இருக்கக்கூடாது... ஆஃபீஸ் நாள்னா... ஞாயித்துக்கிழம பேசாம இருக்கலாம்னு இருக்கேன்.. ஜாடையால கூட பேச மாட்டேன்.... என் முன்னாடி வந்து நின்னுண்டு பால்காரன் வந்தானா? வேலைக்காரி வந்தாளான்னு தொணதொணக்கக்கூடாது... பார்த்துக்கோ.."
"அடப்பாவமே.. அப்புறம் வாயிருந்தும் ஊமையாய்னு.. யாராவது உன்னை எகத்தாளம் பண்ணப் போறாங்க.. எனக்கு அசிங்கமாயிருக்குமே சுப்பு."
"ம்... சரஸ்வதி சபதத்துல வாயிருந்தும் ஊமையாய் இருக்கிற சிவாஜி வித்யாபதி..அனைத்தும் வந்துவிட்டதுன்னு கலைமகள் முன்னாடி அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவீஈஈஈஈஈ...ன்னு .. அந்த..."
"இப்ப எதுக்குடா சரஸ்வதி சபதமெல்லாம் பேசறே..."
"இல்ல... மூல நட்சத்திரம் வாக்தேவியோடதாம்.. அந்த மூல நட்சத்திரத்தன்னிக்கு மௌன விரதம் இருக்கலாமாம்.. ரொம்ப நல்லதாம்.. "
"சுப்பு... வாக்தேவியே பேச்சுதான கொடுக்கறா.. அதுக்கு போயி ஏன் மௌனமா இருக்கணும்.."
"வாக் சுத்தமாகுமாம்... பேசற காலங்கள்ல பொய் பேசி.. கெட்டதையெல்லாம் பேசினத்துக்கு பிராயச்சித்தமா...அன்னிக்கி மௌன விரதம் இருக்கலாமாம். மகா பெரியவா அந்த நட்சத்திரத்துல மௌன விரதம் இருப்பாளாம்..."
"மனசு சுத்தமாகணும்னா... உள்ளுக்குள்ள மௌனமா இருக்கணும்டா சுப்பு.. அதுதான் முக்கியம்... என் கிட்டே பேசும்போது ரோட்ல யாராவது போனாலே உனக்கு பேச்சு தடுமாறும்....அதனால.. மனசு சுத்தம்தான் மேலானது.. புரிஞ்சுதா?"
"அகம் சுத்தமாகறத்துக்கு வாயை மொதல்ல கட்டணும். தப்பித்தவறி பேசிடக்கூடாதுன்னு வாய்ல கூழாங்கல்ல போட்டுக்கிட்டு மௌன விரதம் இருக்கப்போறேன்"
"நீ நட் கேஸ்டா.. வாய்ல கூழாங்கல்லா?"
"இது மகாபாரதத்துல வர்றது மீனு... ரொம்ப பேசாதே"
"போச்சுடா... உன் வியாக்யானத்தை ஆரம்பிச்சுட்டியா... சொல்லித் தொலை..."
"துரியாதனாதிகள் காலமாயாச்சு.. தர்மபுத்ரர் ஆட்சி நடக்கறது... கொஞ்ச வருஷம் கழிச்சு திருதராஷ்டிரனும் காந்தாரியும் வானபிரஸ்தம் கிளம்பறாங்க.. வானபிரஸ்தம்னா என்னன்னு உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன்..”
“தெரியும்.. விட்டுடு....”
“அவங்க ரெண்டு பேரும் கிளம்பினதும்.. விதுரர் அரண்மனையில இருக்கார். அவருக்கும் ரொம்ப வருத்தம்.. என்ன பண்றது... உடனே ஒரு சபதம் எடுத்துக்கறார்... இனிமே பேசக்கூடாது.. மௌனமாவே இருந்துட்டு.. மேலோகம் போயிடணும்னு.. முடிவு பண்ணி... வாயில கூழாங்கல்ல போட்டுண்டு... அவரும் திருதிராஷ்டிரன் காந்தாரி பின்னாலயே வானபிரஸ்தம் கிளம்பினாராம்...”
“ஓகேடா சுப்பு.. சூப்பர்... நீ என்னிலேர்ந்து மௌன விரதம் இருக்கப்போறே... அதாவது காஷ்ட மௌனம்...”
“ஏன்?”
“இல்லே என்னோட ஃப்ரெண்ட் மும்பை சௌமித்ரி நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்கா.... உன் ஹஸ்பெண்ட் சிரிக்கச் சிரிக்க பேசுவார்டி... ஒரு நாள் செமையா அரட்டை அடிக்கணும்னு சொல்லியிருக்கா... உன்னோட மௌன விரத டேட் சொல்லு.. அன்னிக்கி வரச்சொல்றேன்... நிம்மதியா இருக்கும்...”
“சௌமித்ரி விஸிட்டுக்கு அப்புறம்தான் மௌன விரதமெல்லாம்.. அவள மொதல்ல வரச்சொல்லு... பேசறது கூட ஒரு விரதமாம்.. ரொம்ப நல்லதாம்.. “
“எடுடா ப்ரூம் ஸ்டிக்கை.... படுவா ராஸ்கல்....”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails