Sunday, October 22, 2017

சுப்பு மீனு: Life is Beautiful

"சுப்பு... ரொம்ப டல்லா இருக்கியே... எம் மேலே எதுனா கோபமா?"
"ச்சே...ச்சே.. இல்லே மீனு... உங்கிட்டே கோச்சுப்பேனா? கோச்சுண்டா.. நீ டூத் பேஸ்ட் மாதிரி போடற உப்புமா கூட நாளைக்கு கிடைக்காம போயிடுமே... பூவாவுக்கு என்ன பண்ணுவேன்? "
"அதானே பார்த்தேன். காலை வாராம விடமாட்டியே.. ஏன்டா மூஞ்சியைத் தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கே...பாவமா இருக்கேன்னு கேட்டா.. என்னையே கலாய்க்கிறியா?"
"தமிழ் வருஷப் பிறப்பு அன்னிக்கி ஒரு படம் பார்த்தேன். மனசுக்குள்ளே கப்புன்னு ஒரு டன் சோகம் அப்பிக்கிச்சு... அதை மறக்க எவ்ளோ ஜோக் அடிச்சாலும்... பாட்டுக் கேட்டாலும்.. திரும்பத் திரும்ப அதையே நினைச்சுக்கிட்டு இருக்கேன் மீனு.. மீ பாவம்...ப்ளீஸ் தேத்திஃபை மீ"
"டேய்... ரொம்ப ஃபீலாவாதே... என்ன படம்? மகாநதியா? அதைப் பார்த்தாதான் சின்னக் கொழந்தை கைலேர்ந்து காட்பரீஸ் பிடிங்கினா மாதிரிக் கேவிக் கேவி அழுவே.."
"மீனு... சோனாகஞ்ச்லேர்ந்து தன்னோட பொண்ணைக் கமல் அழைச்சுண்டு வரும்போது எல்லாப் பயலும் சேர்ந்து அடிப்பாங்க.. அப்போ பூர்ணம் தாத்தா "டே...அது அவன் பொண்ணுடா..."ன்னு சொல்லிட்டு அவரும் மொகத்தைப் பொத்திண்டு 'பே'ன்னு அழுவார்.. அந்த சீன் வரும்போது நானும் சேர்ந்து கோரஸா அழுவேன்... உன்னை மாதிரி கல்நெஞ்சுக்காராதான் சீரியஸா திரையை முழிச்சுப் பார்த்து செல மாதிரி உட்கார்ந்திருப்பா.."
"சுப்பு.. போற போக்கிலே என்னை தட்றியே.. படுபாவி. நா கல்நெஞ்சக்காரியா? மகாநதி போட்டா பார்க்காதே..சேனல் மாத்திடு.. சிம்பிள்.."
"ஊஹும்.. நான் அன்னிக்கிப் பார்த்தது மகாநதியில்லே.."
"அப்ப அந்த வில் ஸ்மித் படம்.. அதென்ன.. ஹாங்... Pursuit of Happiness..அதைப் பார்த்தாலும் ... மீனு.. மீனு... பாவம் மீனு வில் ஸ்மித்.. தன்னோட பையனையும் தெருத்தெருவா அழைச்சுண்டு... அந்த எக்ஸ்ரே மிஷினையும் விக்க முடியாம... ரயில்வே ப்ளாட்ஃபாரத்திலெல்லாம் தூங்கி எழுந்துண்டு... கடேசில ராத்தங்கலுக்காக அந்த கவர்மென்ட் dormitory முன்னாடி வரிசையில நிக்கும் போதுன்னு... என் மடில படுத்துண்டு.. ஒரு குரல் அழுதே.... அது படம்டா சுப்புன்னு சொன்னா கேட்டியா? இல்லே.. இல்லேன்னு அதை உருக்கமா சொல்லி... என்னையும் சேர்த்து அழ வச்சே..."
"என்ன ஒரு தியாக அப்பன் அவன். அழாம இருக்கமுடியுமா மீனு... "
"அதோட நிறுத்தினியா? உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடின்னு ஃபீலர் பாட்டுவேற.. எதிர்த்தாப்ல ஸ்க்ரீன்ல படத்துல அழுகைன்னா.. மடில படுத்துண்டு பாட்டுங்கற பேர்ல உன்னோட ஒப்பாரி ... என்ன டென்ஷன் தெரியுமா அன்னிக்கு? அதைத்தான் திரும்ப பார்த்தியா? ஏன்டா படுத்தறே... நீ பாட்னுக்கு மைக்கேல், பஞ்சதந்திரம், அவ்வை ஷண்முகின்னு ஜோக்குப் படமா பார்த்துத்தொலைக்க வேண்டியதுதானே... இப்டிப் பார்த்துட்டு கழுத்த அறுக்கிறியே"
"இல்லே மீனு.. இது இங்கிலீஷ் படம்..."
"டேய்... இங்கிலீஷ்ல உன்னோட ஜானரே வேற ஆச்சே... அவுட்டோர் ஷூட்டிங்கே இல்லாத படம்தானே பார்ப்பே... நீ சோகப்படம் பார்த்தியா? நம்பமுடியவில்லை.. வில்லை.. வில்லை.."
"ஆமாம் மீனு. MN+ சேனல்ல பார்த்தேன்... படம் பேரு Life is Beautiful"
"நீ அழுவுற அளவுக்கு என்ன கதை?"
"இத்தாலில ஒரு ஸ்டார் ஹோட்டல். Guido ந்ன்னு ஒரு சர்வர். ஜோக்கர் மாதிரி இருக்கான். ஆனா விஷயாதி. அந்த சர்வர்தான் டைரக்டர் கம் வசனகர்த்தா. அவன் Dora ன்னு ஒரு பொண்ணை டாவடிச்சு கல்யாணம் பண்ணிக்கிறான். அவங்களுக்கு Joshua ன்னு ஒரு புள்ளை பொறக்கிறான். அப்புறமா ஹோட்டல் வேலையை விட்டுட்டு பேர் பாதி விலைக்கு புஸ்தகம் விக்கும் கடை போடறார். Doraவுக்கு டீச்சர் வேலை. கேரியர் சைக்கிள்ல பொண்டாட்டியை கொண்டு போய் ஸ்கூல் வாசல்ல இறக்கிட்டு... இங்கிலீஷ் முத்தம் கொடுத்துகிட்டு.. பார்ல உட்கார்ந்துருக்க பயலோட விசிலடிச்சுக்கிட்டே வேகமா மிதிச்சுக்கிட்டு... சந்தோஷமா வாழ்க்கை நகருது."
"சுப்பு... அற்புதமா கதை சொல்றே... நீ ஏன்டா எதாவது சினிமா ட்ராமான்னு போகக்கூடாது?"
"மீனு.. கதை சொல்லும் போது ஊடால புகுந்து ட்ராக்கை மாத்தாதே.. கதையோட ட்ராக்கே இப்போ மாறுது பாரு... "
"ம்.. என்ன?"
"ஜெர்மனியோட நாஜிப்படைகள் இத்தாலிக்குள்ள புகுந்து.... Guido வோட பையன் Joshua இருக்கான்ல... அவனோட பர்த்டே அன்னிக்கி Concentration Camp க்கு வண்டி ஏத்தறாங்க... அடி வயத்துல கத்தி சொருகினது மாதிரி ஆயிட்டுது... எனக்கு... கதிகலங்கிப் போயிட்டேன்.. ஆனா Guido என்ன பண்ணினான் தெரியுமா? சிரிச்சிக்கிட்டே... இது ஒரு கேம்.. நீ Tank Toy கேட்டியில்ல... அதுக்கு ஒரு கேம் ஆடப் போறோம்... 1000 பாயின்ட் எடுத்தா நமக்கு அந்த டாய் கிடைக்கும்..ன்னு வெளையாட்டு காமிச்சுக்கிட்டே அழைச்சுக்கிட்டு போறான்.. வதைமுகாமுக்கு சிரிச்ச முகத்தோட போய் இறங்கறான்..."
"பாவமாத்தான் இருக்கு.. Dora என்ன ஆனா?"
"கரெக்ட்டா கேப்பியே... அவ Jew கிடையாதுன்னு அவளை விட்டுடறாங்க.. ஆனா... அவ என்ன பண்ணினா தெரியுமா? ஓடிப்போயி தானும் அந்த ரயில்ல ஏறிக்கறா... அந்த குழந்தை கேள்வி கேட்டுண்டே வருது... ஒவ்வொண்ணுக்கும் அப்பங்காரன் பதில் சொல்றான் பாரு... அடடா... அவன் சிரிப்பா சொல்றது நமக்கு அழுகையா வருது மீனு... அந்த சோகம் தான் என்னை டீப்பா தாக்கிடுச்சு..."
"கடேசில என்ன ஆச்சு?"
"கடேசிக்கு போயிட்டே.. இன்னும் ஒண்ணு ரெண்டு interesting கேரக்டர்ஸ் இருக்கு. அவா பேசற வசனமெல்லாம் Sharp. Crisp. poignant. இவன் சர்வரா வேலை பார்த்துக்கிட்டு இருக்கறப்ப ஒரு சீன்... எல்லோருக்கும் எவ்ளோ தூரம் தலையைக் குனிஞ்சு மரியாதை பண்ணி ஆர்டர் எடுக்கணும்.. கொடுக்கணும்னு... வேடிக்கையா பண்ணிக் காமிப்பன். அப்போ அவன் மாமா ஒரு வ்சனம் சொல்வார் பார்த்துக்கோ...
You're serving. You're not a servant. Serving is a supreme art. God is the first servant. God serves men but he's not a servant to men"

"டேய் சுப்பு... அபாரம்டா.. கடவுள் சேவை செய்யறான்.. ஆனா உன்னோட சேவகன் கிடையாதுங்க்கிறான்.. ஆனா நம்பளோட பாரதி ஒரு படி மேலே போய் கண்ணன் என் சேவகன்னு எழுதினான். கிருஷ்ணர் மேலே தோள் மேலே கை போட்டுக்கிற லிபர்ட்டி. எப்டி?"
"மீனு.. அபாரம்.. உன்னோட கம்பேரிசன் இருக்கு பாரு.. அப்புறம் ஒரு டாக்டர் வரார்.. அவரும் ஜூ கிடையாது. அவர் அந்த ஸ்டார் ஓட்டல்லேர்ந்து கிளம்பும்போது ஃப்ளவர் வேஸோட Guido வர்றதப் பார்த்துட்டு.. கேட்பார். "What are flowers for?" ன்னு .. அதுக்கு இவன் "Flowers are for departure"ம்பான்.. இந்த சீன் முடிஞ்சத்துக்கப்புறம் அந்த டாக்டர் லெஸ்ஸிங்கை இவன் வதைமுகாம்லதான் பார்ப்பான்.. So, it is for departure.. எவ்ளோ ஆழம் பார்த்தியா... இதெல்லாம் நம்ம கோலிவுட்ல பன்ச் வசனம் எழுதிப் பாடாய்ப் படுத்தறவங்க கேட்கணும்.. பார்க்கணும்.. எழுதணும்.."
"ஏம்பா? சிங்கம் சிங்கிளா வரும்... ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு.. இதுக்கெல்லாம் கைதட்டி சிரிச்ச ஆளுங்கதானேப்பா நீங்க...."
"மீனு.. அதை விடு... அந்த டாக்டர் லெஸ்ஸிங் அடிக்கடி Riddles போடுவார்.. நம்ம Guido அதுக்கு பதில் சொல்லுவான்.. ஒரு விடுகதை கேளேன்.. If you say my name I'm not there anymore. Who am I?. நீதான் ப்ரில்லியன்ட் ஆச்சே.. சொல்லேன் பார்க்கலாம்.."
"சுப்பு.. சேலஞ்ச் பண்ணாதே... கொஞ்சம் டைம் குடு.. மேலே கதையைச் சொல்லு.. கடேசில சொல்றேன்... ரொம்ப ஆடாதே...ஓகே? க்ளைமாக்ஸ் என்ன?"
"ஆயிரம் பாயின்ட் எடுக்கறத்துக்காக டெய்லி நான் வெளில போய் விளையாண்டுட்டு வரேன்னு அந்த பையனையும் Concentration Campல இருக்கிற ஷெல்ஃப் பெட்ல படுக்க வச்சு அவதிப்படறான் ஹீரோ.. ஆனா அப்பப்போ ஸ்பீக்கர் கிடைச்சா பொண்டாட்டி பேரைச் சொல்லாம அவளை லவ் பண்றதைச் சொல்றான்.. அப்புறம் அவளுக்குப் பிடிச்ச பாட்டைப் போட்டுக்காட்டறான். லேடீஸ் ஏரியாவுல இருக்கிற அவ அதைக் கேட்டு புல்லரிச்சுப்போறா.. கலங்கறா.. உங்கம்மா ஊர்லேர்ந்து வந்தா.. உனக்கு ஒரு மாதிரியா வந்து கண்ணையெல்லாம் முந்தானையாலத் துடைச்சுப்பியே... அதுமாதிரி.. உணர்ச்சிப்பூர்வமான சீன் ஆயிரம்.. "
"சுப்பு உதைபடுவே... க்ளைமாக்ஸ்?"
"ஒரு நாள் பொண்டாட்டியைப் பார்க்க லேடீஸ் கேம்புக்குள்ள போறான். அவனைப் புடிச்சுடறாங்க... அப்போ அந்தப் பையன ஒரு ஜங்ஷன் பாக்ஸ்ல ஒளிஞ்சுக்க சொல்லிட்டு அவன் துப்பாக்கி முனையில சிப்பாய் கூப்பிடப் போயிடறான்... ஏதோ சுச்சா போறத்துக்கு ஒதுங்கறா மாதிரி அவனை ஒரு மறைவுக்குக் கூட்டிண்டு போய் "டொப்"புன்னு சுட்டுத்தள்ளிடறான்கள்...கடேசியா அந்தப் பையன் அவனோட அம்மாவோட சேர்ந்துடறான்... அப்பா செஞ்ச தியாகத்தை நினைச்சுப் பார்க்கறான்.. எண்ட் போட்டுடறாங்க..."
"இப்படி ஒரு இனத்தை அழிச்சானே படுபாவி ஹிட்லர்.. அவனென்ன ஆயிரம் வருஷம் வாழ்ந்தானா?. இல்லைன்னா வாழும் போதுதான் சுகமா இருந்தானா? படம் பேரு என்ன சொன்னே?"
"Life is Beautiful"
"கொடுமடா சுப்பு... இப்படி வாழ்ந்தாலும் வாழ்வின் அழகியலைக் காண்பிச்சத்துக்கான டைட்டிலா இருக்கும்.. இதுக்கு எதாவது அவார்ட் கிடைச்சிருக்கணுமே... உன்ன அழ வச்சுருங்காங்களே."
"ஆமா.. ரெண்டு அகாதமி அவார்ட் கெடைச்சிருக்கு... சரி..சரி.. அப்படியே நைஸா தப்பிக்காதே... டாக்டர் லெஸ்ஸிங் கேட்ட riddle க்கு பதில் என்ன?"
"போடா மொக்க.. உன்னால் எப்பவுமே இருக்க முடியாதே.. அந்த நிலை... அது Silence டா சுப்பு..."
"க்ரேட் மீனு.. உன்னை பொண்டாட்டியா அடைஞ்சத்துக்கு நான் பூர்வ ஜென்மத்துல ஆயிரம் அழகிகளுக்கு வாழ்வு கொடுத்து திருமண சேவை பண்ணியிருக்கணும்..."
"அடப்பாவி சுப்பு.... எட்றா கட்டைய..."
"மீ எஸ்கே................ப்..."

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails