Sunday, October 22, 2017

சுப்பு மீனு: Opera Vs ஒப்பாரி

"இனிமே இது மாதிரி ஒப்பாரி பாட்டெல்லாம் போட்டா இவா Mall-க்கு வரமாட்டேன்னு சொல்லு சுப்பு... disgusting..”
“மீனு இது Opera மா... ஒப்பாரி டெத்துக்கு பாடுவா..... மார்ல அடிச்சுண்டு..”
“யேய் ரொம்ப ஓட்டாதே... எங்களுக்கும் தெரியும்... இருந்தாலும் வாய் சுளிக்கிக்கறா மாதிரி இழுக்கறானேப்பா... புதுசா கேட்கறவாளுக்கு யாரோ மூச்சுவிட மறந்துட்டான்னுதானே தோணும்?! ...”
“நம்ப பாகவதாள்லாம் ஆரோகணம் அவரோகணம் இழுக்கறதில்லையா... மீனு...”
“கரெக்ட்டுதான் அதைத்தான் காப்பி அடிச்சுட்டானுங்க போல்ருக்கு...நம்பளோட க்ளாஸிக்கல் ம்யூசிக் வேத காலத்துலயே தோன்றினது...சாஃப்ட்.. சுகமா இருக்குமே... இவனுக ஒபாராவெல்லாம் sixteenth century கடேசிதான்... அப்புறம்தான் வளர்ந்தது....”
“நம்ப தியாகைய்யர் கூட mid of seventeenth century க்கு அப்புறம்தானே.... மீனு.....”
“ரொம்ப பேசாதே... அப்டியே கானகலாதரன் மாதிரி கர்நாடிக் ம்யூசிக் ஹிஸ்டரியெல்லாம் அளப்பியே ... சுப்பு.. ஒண்ணு ரெண்டு தெரிஞ்சுவச்சுண்டுன்னு பெருசா ஜல்லியடிக்கிறதுல நீ தான் சூரன்...”
“சரிடீம்மா.. நீ பேசறதே சங்கீதம்தான் போதுமா?”
“ஹா..ஹா.. இப்டி சட்னு சரண்டர் ஆயிடற பாத்தியா.. இதுதான் உங்கிட்டே இருக்கிற Adorable attitude...."
"ஸ்வாகதம் மீனு....”
“போதும்... போதும்.. கடைசியா உனக்கு புரியறா மாதிரி சொல்லட்டா?”
“ம்..”
“கமல் மாதிரி அழுதா Opera... காந்திமதி மாதிரி அழுதா அது ஒப்பாரி...”
“தாயே! நீயே கான சரஸ்வதி.. நமஸ்காரம்...”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails